வியாழன், 18 ஏப்ரல், 2024

ராகுல் காந்தி, அபிஷேக் பானர்ஜி ஹெலிகாப்டர்கள் சோதனை : தேர்தல் நடத்தை விதி சொல்வது என்ன?

 இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 19)தொடங்க உள்ள நிலையில்கடந்த சில தினங்களாக எதிர்கட்சி தலைவர்களின் ஹெலிகாப்டர்கள் தேர்தல் அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்ட செய்திகள் வெளியாகி வருகிறது. பொதுவாக அரசியல் தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்திற்காக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு விரைவில் செல்வதற்காக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அதே சமயம் மக்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதை தடுக்கும் நோக்கில் தேர்தல் ஆணையத்தின் (EC) வட்டாரங்கள் தேர்தல் குழுவின் நிலையான அறிவுறுத்தல்களின்படி ஹெலிகாப்டர்களில் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறினாலும்தங்களைத் துன்புறுத்துவதற்காக மத்திய அரசின் உத்தரவின் பேரில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் விமானநிலையங்கள் மற்றும் ஹெலிபேடுகள் வழியாக பணம் மற்றும் இலவசங்கள் எடுத்துச்செல்வதை தடுக்கும் வகையில் மாதிரி நடத்தை விதிகள் (MCC) அமலில் இருந்து வருகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் குற்றச்சாட்டுகள் என்ன?

திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தேசிய பொதுச் செயலாளரும்மேற்கு வங்கத்தில் உள்ள டயமண்ட் ஹார்பர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான அபிஷேக் பானர்ஜி கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14) தனது ஹெலிகாப்டர் வருமான வரித் துறை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். I-T அதிகாரிகள் ஹெலிகாப்டரை தரையிறக்கும் அச்சுறுத்தல் கொடுத்தாகவும்ஹெலிகாப்டரை சோதனை செய்தபோது எடுத்த வீடியோ பதிவை பானர்ஜியின் பாதுகாப்புப் பணியாளர்கள் நீக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியதாகவும்டி.எம்.சி குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ஐடி அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (ஏப்ரல் 15)காங்கிரஸ் மூத்த தலைவரும்வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது ஹெலிகாப்டர் மூலம் தமிழ்நாடு நீலகிரிக்கு வந்தபோது,  அவரது ஹெலிகாப்டரைதேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்வயநாடு எம்.பி.யின் ஹெலிகாப்டரை தேர்தல் குழு சோதனை செய்வதில் கட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லைஆனால் சமதளம் இருக்க வேண்டும் "பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயன்படுத்தும் ஹெலிகாப்டர்களையும் தேர்தல் ஆணையம் சோதனை செய்ய வேண்டும்" என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

தேர்தல் ஆணையம் (EC) வழிகாட்டுதல்கள் சொல்வது என்ன?

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவிமான நிலையங்கள் மற்றும் ஹெலிபேடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அமலாக்க அமைப்புகளுடன் தேர்தல் ஆணையம் கூட்டங்களை நடத்தியது மற்றும் விதிகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான அதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

வணிக விமான நிலையங்களில் பட்டய விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் புறப்படுவதற்கு அல்லது தரையிறங்குவதற்கு தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயமில்லை.. அதே சமயம்விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு (ATC) மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி (DEO) ஆகியோருக்கு பட்டய விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் இயக்கம் பற்றி "முடிந்தவரை, அரை மணி நேரத்திற்கு முன்னதாக" தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் புறப்படும்/இறங்கும் நேரம்பயணிகள் மேனிஃபெஸ்ட் மற்றும் வழித் திட்டம் உள்ளிட்ட அனைத்து பட்டய விமானங்களின் பதிவையும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு (ATC)  வைத்திருக்க வேண்டும்.தேர்தல் ஆணையம்  வழிகாட்டுதல்கள் அத்தகைய விமானங்களில் உள்ள சாமான்களை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) அல்லது காவல்துறையினரால் "எந்தவித தளர்வும் இல்லாமல்" காட்ட வேண்டும். ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பணம் அல்லது ஒரு கிலோவுக்கு மேல் எடையுள்ள பொன்கள் சாமான்களில் காணப்பட்டால்தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று இந்த பணியாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

வர்த்தகம் அல்லாத ஹெலிபேடுகள் மற்றும் விமான நிலையங்களுக்கான தேர்தல் ஆணையம்  விதிகள் என்ன?

தேர்தல் ஆணையத்தில் அமைக்கப்பட்ட பறக்கும் படைகள் அல்லது காவல்துறைவிமானியுடன் ஒருங்கிணைத்துபெண் பயணிகளின் கையில் வைத்திருக்கும் பர்ஸ்கள் தவிரவணிக ரீதியில் அல்லாத ஹெலிபேடுகள் மற்றும் விமான நிலையங்களில் விமானத்தில் உள்ள அனைத்து சாமான்களையும் பார்வையிட வேண்டும் அல்லது பயணிகளின் உடல் ரீதியாக சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்வதற்காகவிமானம் மற்றும் ஹெலிகாப்டரில் வருவதற்கு24 மணிநேரத்திற்கு முன்னதாகசம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பம் செய்யுமாறு தேர்தல் குழு வேட்பாளர் அல்லது அரசியல் கட்சியை கட்டாயப்படுத்துகிறது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படிஎந்தவொரு விமானத்திலும் வேட்பாளர் அல்லது கட்சி நிர்வாகிகளுக்குச் சொந்தமான ரூ. 50,000-க்கும் அதிகமான மதிப்புள்ள பணம் வைத்திருந்தால் விசாரிக்கப்பட்டு பறிமுதல் செய்யப் படும்.

இருப்பினும்அந்த நபர் எடுத்துச் செல்லும் அங்கீகரிக்கப்படாத ஆயுதங்கள் அல்லது கடத்தல் பொருட்கள் போன்றவை பற்றிய குறிப்பிட்ட தகவல்கள் இல்லாவிட்டால்அத்தகைய தொலைதூரக் கட்டுப்பாடற்ற விமான நிலையங்கள் / ஹெலிபேடுகளில் தரையிரங்கும் போதுஎந்தவொரு பயணியின் உடலையும் சோதனையிடக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

கடந்த தேர்தல்களின் போது தலைவர்களின் விமானங்கள் சோதனையிடப்பட்டதா?

தலைவர்களை சோதனை செய்வதும்அவர்களின் ஹெலிகாப்டர்களை சோதனை செய்வதும் கடந்த காலங்களிலும் பெரிய சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. 2019 மக்களவை தேர்தலுக்கு முன்னதாகஒடிசாவில் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரைத் சோதனை செய்வதற்காக தேர்தல் அதிகாரி என்ற வகையில் கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரி முகமது மொஹ்சின் உத்தரவிட்டிருந்தார். இந்த நடவடிக்கைக்காக தேர்தல் ஆணையம் மொஹ்சினை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

மேலும் பிரதமரின் பாதுகாப்பை சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG) கையாண்டதால்அத்தகைய சோதனைகளில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது என்று வாதிட்டது. அதன்பிறகு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT) அவரது இடைநீக்கத்தை நிறுத்தி வைத்தது, " பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG) பாதுகாப்பாளர்கள் எதற்கும் தகுதியானவர்கள் என்று கூற முடியாது" என்று மத்திய நிர்வாக தீர்ப்பாயம் கூறியதை தொடர்ந்து மொஹ்சின் இடைநீக்கத்தை தேர்தல் குழு ரத்து செய்தது.


source https://tamil.indianexpress.com/india/political-pulse-rahul-gandhi-abhishek-banerjee-choopers-searches-ec-rules-4487423