தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்! – இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவு!
25 4 24
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகம் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேலாக பதிவாகி வருகின்றது. அனல் காற்று வீசுவதினால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக பதிவாகியுள்ளது. குறிப்பாக ஈரோட்டில் வடக்கு பகுதிகளில் வெப்ப அலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 42.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும், வேலூரில் 41.6 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 41.4 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 41.1 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தி பகுதியில் 41 டிகிரி செல்சியஸ், தர்மபுரி பகுதியில் 40.7 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 40. 6 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 40.5 டிகிரி செல்சியஸ், நாமக்கலில் 40.5° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவிலும், மலைப்பகுதிகளில் 21 முதல் 31 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.
source https://news7tamil.live/burning-heat-in-tamil-nadu-record-2-to-4-degrees-celsius-more-than-normal.html