வியாழன், 18 ஏப்ரல், 2024

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இதில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும்!

 

வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும், வாக்களிக்கத் தகுதியான நபர்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை செய்யலாம். அதற்கான விரிவான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட, நாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை (வோட்டர் ஐடி) பிரதான ஆவணமாக கருதப்படுகிறது. வாக்களிக்க, தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அடையாளத்தை காட்டினால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

அதேவேளையில், இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை இல்லாமலும் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கலாம். அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கும் வரை நீங்கள் வாக்களிக்கலாம். வாக்களிப்பதற்கு முன்,  இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள மாற்று ஆவணங்களை வாக்காளர் பயன்படுத்தலாம்.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால், அடையாளத்தை உறுதி செய்ய வோட்டர் ஐடி மற்றும் அதற்கு மாற்றாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம்.

  • ஆதார் அட்டை
  • MNREGA வேலை அட்டை (100 நாள் வேலை திட்டத்திற்கான அடையாள அட்டை)
  • வங்கி/அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ் புக்குகள், 
  • தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
  • ஓட்டுநர் உரிமம்
  • பான் கார்டு
  • NPR இன் கீழ் RGI வழங்கிய ஸ்மார்ட் கார்டு
  • இந்திய பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
  • மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்கள்/பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய சேவை அடையாள அட்டைகள்
  • எம்.பி.க்கள்/எம்எல்ஏக்கள்/எம்எல்சிகளுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள்
  • தனிப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை (UDID) அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அடையாள அட்டை

source https://news7tamil.live/dont-have-voter-id-card-dont-worry-you-can-use-other-documents.html#google_vignette