ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

 

மழை வேண்டி 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திருச்சியில் கண்ணீர் மல்கச் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். 

தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் கோடை வெயில் சுட்டெரித்துவருவதுடன்
தொடர்ச்சியாக 13மாவட்டங்களில் 1௦௦ டிகிரியைத் தாண்டி வெயில் பதிவாகிவருகிறது.

தற்போது பருவமழை பொய்த்து விட்டதாலும்,  காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரைப் பெற்றுத்தர விளம்பர திமுக அரசு எந்தவித நடவடிக்கை மேற்கொள்ளாததாலும், நிலத்தடிநீர் செறிவூட்டலுக்கும் எந்த முயற்சியும் செய்யாததாலும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.  மேலும் திருச்சியிலுள்ள ஏரி,  குளங்கள் வறண்டு கிடக்கின்றன. மேலும் விவசாயிகள்,  பொதுமக்கள்,  கால்நடைகள் மழை இல்லாததால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனை கருத்திற்கொண்டு திருச்சி பாலக்கரை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் திருச்சி பாலக்கரை பிரபாத் திடலில் திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை தலைவர் முஹம்மது ரூருல் ஹக் ரஷாதி தலைமையில் 500க்கும் மேற்பட்ட உலமாக்கள், ஆலிம்கள் மற்றும் இஸ்லாமியப் பெருமக்கள் பங்கேற்று தமிழகத்தில் மழைபெய்து வளம்பெருக வேண்டி நபிவழியில் சிறப்பு தொழுகை நடத்தினர்.

source https://news7tamil.live/more-than-500-muslims-tearful-special-prayer-for-rain.html