ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

வீணாய் போன விழிப்புணர்வு பிரச்சாரம் : புதுச்சேரியில் வாக்குப்பதிவு 2 சதவீதம் குறைவு

 

புதுச்சேரியில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி தேர்தல் துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திய நிலையில்கடந்த தேர்தலை விட வாக்கு சதவீதம் சரிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 19) தொடங்கியது. தமிழ்நாடு புதுச்சேரிஅருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் 100-க்கு மேற்பட்ட தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு புதுச்சேரி என 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த வாக்குப்பதிவில் தமிழகத்தில் 70 சதவீததத்திற்கு மேலாக வாக்குகள் பதிவாயிருந்த நிலையில்புதுச்சேரியில் வாக்கு சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த 2019ல் நடந்த மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் 81.25 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் துறை சார்பில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

மேலும்வாக்காளர்களை கவரும் வகையில் பசுமை வாக்குச்சாவடிமகளிர் வாக்குச்சாவடிமாற்றுத்திறனாளி வாக்குச்சாவடிஇளையோர் வாக்குச்சாவடி உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 2019ல் நடந்த மக்களவைத் தேர்தலை விட இம்முறை 2.68 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இது தேர்தல் துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/parliament-election-2024-puducherry-vote-percentage-less-4498393