பாஜகவின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக இருந்த பொது சிவில் சட்டத்தை (UCC) அமல்படுத்துவது, பாஜக பெரும்பான்மையை இழந்துவிட்டதால் அரசாங்கத்திற்கு அவ்வளவு சுலபமாக இருக்காது.
அதன் தற்போதைய கூட்டாளிகள் கடந்த காலத்தில் முன்மொழிவு குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறைக்கான மத்திய இணை அமைச்சர் (சுயாதீன பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால் செவ்வாயன்று, பொது சிவில் சட்டம் இன்னும் அரசாங்க நிகழ்ச்சி நிரலில் உள்ளது, காத்திருந்து என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும், என்று கூறினார்.
ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) தேசிய பொதுச் செயலாளர் KC தியாகி புதன்கிழமை இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பொது சிவில் சட்டம் குறித்து 2017 இல் சட்ட ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார். எங்களின் நிலைப்பாடு அப்படியே உள்ளது. நாங்கள் பொது சிவில் சட்டத்துக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் அது ஒருமித்த கருத்து மூலம் வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் மூன்றாவது பெரிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம், " பொது சிவில் சட்டம் ஒரு சீர்திருத்த நடவடிக்கையாக பார்க்கப்பட வேண்டும்... அரசியல் கருவியாக அல்ல" என்று கூறியது.
16 எம்.பி.க்களுடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது பெரிய கூட்டாளியாக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி, பொது சிவில் சட்டம் போன்ற பிரச்சினைகள் மேஜையில் வைத்து பேசி தீர்க்கப்பட வேண்டும் என்று கூறிவருகிறது.
2017 ஆம் ஆண்டு நிதிஷ் தனது கடிதத்தில், ”அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும் என்றாலும், அத்தகைய முயற்சி, நீடித்த மற்றும் நிலையானதாக இருக்க, மேலே இருந்து திணிக்கப்படுவதற்குப் பதிலாக, பரந்த ஒருமித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
இந்தியா பல்வேறு மதங்கள் மற்றும் இனக்குழுக்களுக்கான சட்டங்கள் மற்றும் ஆட்சிக் கொள்கைகள் தொடர்பாக நுட்பமான சமநிலையை அடிப்படையாகக் கொண்ட நாடு.
பொது சிவில் சட்டத்தை சுமத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் சமூக உராய்வு மற்றும் மத சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உத்தரவாதத்தின் மீதான நம்பிக்கை அரிப்புக்கு வழிவகுக்கும்” என்று கூறினார்.
சட்ட கமிஷன் அனுப்பிய கேள்வித்தாள் குறித்தும் நிதிஷ் ஆட்சேபனைகளை எழுப்பினார், இது "பதிலளிப்பவர்களை ஒரு குறிப்பிட்ட முறையில் பதிலளிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டது" என்று அவர் கூறினார்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் நாரா லோகேஷ், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், “எல்லை நிர்ணயம், பொது சிவில் சட்டம் போன்ற பிரச்சினைகள் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு சுமுகமாக தீர்க்கப்படும். நாங்கள் கட்சிகளுடன் ஒன்றாக அமர்ந்து விவாதித்து, இந்த எல்லா பிரச்சினைகளிலும் ஒருமித்த கருத்தை அடைய முயற்சிப்போம்,” என்றார்.
இதற்கிடையில், சமீப காலம் வரை ஆந்திராவில் ஆட்சியில் இருந்த YSRCP, பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.
’தேர்தலுக்கு முன்பே, நாங்கள் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று எங்கள் கட்சி தெளிவுபடுத்தியிருந்தது. நாட்டின் நலன் சார்ந்த விஷயங்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம்’, என்று ஒய்எஸ்ஆர்சிபி நாடாளுமன்றக் கட்சித் தலைவர் விஜயசாய் ரெட்டி, தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/arjun-ram-meghwal-ucc-uniform-civil-code-amendment-jdu-bjp-4758869