
ஆசிய அளவில் சிறப்பு வாய்ந்த முதல் 25 அருங்காட்சியகங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 5 அருங்காட்சியகங்களும் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த 'ட்ரிப் அட்வைஸர்' என்ற சர்வதேச பயண ஏற்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அந்தப் பட்டியலில், கொல்கத்தாவில் அமைந்துள்ள 'விக்டோரியா மெமோரியல் ஹால் ' அருங்காட்சியகம், 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள 'சிட்டி பேலஸ்' அருங்காட்சியகம், 15-ஆவது இடத்தையும், உதய்பூரில் உள்ள 'பகோர் கி ஹவேலி' அருங்காட்சியகம் 18-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.