வியாழன், 28 செப்டம்பர், 2017

வெஸ்டர்ன் டாய்லெட்டா...ஏசியன் டாய்லெட்டா...? September 27, 2017

வெஸ்டர்ன் டாய்லெட்டா...ஏசியன் டாய்லெட்டா...?


தென் கொரியாவில், ஆயிரம் ஆண்டுக்கு முன் பயன்படுத்தப்பட்ட FLUSHING வகை கழிவறை ஒன்று கண்டெக்கப்பட்டுள்ளது. 

தென்கொரியாவின் கையாங்ஜூ எனும் நகருக்கு அருகில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது இந்த கழிவறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.பி.693ம் ஆண்டு முதல் 907ம் ஆண்டு வரை கொரிய தீபகற்பத்தை சில்லா வம்சத்தினர் ஆட்சி செய்து வந்தனர். கி.பி. 800களில் சில்லா வம்சத்தினரின் ஆட்சியிலேயே இந்த FLUSING வகை கழிப்பறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிரானைட் கற்களால் நீள்வட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கழிப்பறை 1000 ஆண்டுகளுக்கு முன்பே நேர்த்தியான வடிகால் அமைப்புடன் உருவாக்கப்பட்டிருப்பதே இதன் சிறப்பாக பார்க்கப்படுகிறது. கொரிய தீபகற்பத்தில் வடிகால் அமைப்புடன் கூடிய 1000 ஆண்டுகால பழமைவாய்ந்த கழிப்பறை கண்டுபிடிப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும். 

8 ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட இந்த கழிவறை மன்னர் வம்சத்தினர் உபயோகப்படுத்தினார்கள் என கூறப்படுகிறது.மேலும் கற்களைக்கொண்டே தண்ணீரை Flush செய்யும் வகையிலும் இந்த கழிப்பறை வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த நவீன வகை கழிப்பறையை மேற்கத்திய நாடுகள்தான் கண்டுபிடித்தது எனக்கூறி  Western Toilet என அழைக்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் இது ASIAN TOILET என்று அழைக்கப்படலாம்.