புதன், 5 ஜூன், 2024

NEET UG 2024 Results: நீட் தேர்வு ரிசல்ட் வெளியீடு; 67 பேர் முதலிடம் பிடித்து அசத்தல்

 source https://tamil.indianexpress.com/education-jobs/neet-ug-2024-result-record-67-students-get-rank-1-increase-in-cut-off-4744447


NEET UG 2024 Results: தேசிய தேர்வு முகமை (NTA) இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) 2024 முடிவுகளை அறிவித்துள்ளது. பொதுப் பிரிவு மற்றும் பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளி பிரிவினருக்கான கட்-ஆஃப் கடந்த ஆண்டு 720-137 ஆக இருந்தது. இந்த ஆண்டு 720-164 ஆக அதிகரித்துள்ளது. அகில இந்திய ரேங்க் 1-ஐ 67 மாணவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்கள் 99.997129 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட சாதி, பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, கடந்த ஆண்டு 136-107 ஆக இருந்த நீட் தேர்வு கட்-ஆஃப் இந்த ஆண்டு 163-129 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், SC, ST மற்றும் OBC பிரிவுகளின் மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கான நீட் தேர்வு கட் ஆஃப், கடந்த ஆண்டு 120-107 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 145-129 ஆக அதிகரித்துள்ளது.

பொதுப் பிரிவைச் சேர்ந்த மருத்துவ விண்ணப்பதாரர்களுக்கான எம்.பி.பி.எஸ் (MBBS) மற்றும் பி.டி.எஸ் (BDS) படிப்புகளுக்கான நீட் கட்-ஆஃப் 50 சதவீதம், OBC, SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 40 சதவீதம். நீட் தேர்வில் அகில இந்திய பொதுத் தகுதிப் பட்டியலில் அதிக மதிப்பெண்கள் பெற்றதன் அடிப்படையில் நீட் சதவீதத்தை தேசிய தேர்வு முகமை தீர்மானிக்கிறது.

இந்த ஆண்டு மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு 24,06,079 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர், அவர்களில் 23,33,297 பேர் தேர்வு எழுதினர். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மொத்த மருத்துவ ஆர்வலர்களின் எண்ணிக்கை 13,16,268 ஆகும். தேசிய தேர்வு முகமை பகிர்ந்துள்ள தரவுகளின்படி, மொத்த தகுதி பெற்ற மாணவர்களில், 5,47,036 மாணவர்கள், 7,69,222 மாணவிகள் மற்றும் 10 திருநங்கைகள்.