புதன், 5 ஜூன், 2024

ஆட்சியமைக்க எந்த ஒரு தனிக் கட்சியும் அருதி பெரும்பான்மை பெறாத நிலை! கூட்டணி சேர்த்து மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது

 

ஆட்சி அமைக்க எந்த ஒரு தனிக் கட்சிக்கும் இதுவரை தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. 

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. அதே நேரம் அதன் கூட்டணி கட்சியான பாமக தருமபுரி தொகுதியில் முன்னிலையில் இருந்தது. ஆனால் இறுதியில் அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் மணி 21300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன. 

மத்தியில் பெரும்பான்மையை நிருபித்து ஆட்சி அமைக்க 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 543 தொகுதிகளில், 291 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் பாஜக 240 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதேபோல், இந்தியா கூட்டணி 234 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 30 தொகுதிகளிலும், திமுக 22 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துவருகின்றன. இதில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இதன்படி, எந்த கட்சிக்கும் இதுவரை தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் கூட்டணி கட்சிகள் இடம் மாறுமா? ஆட்சி அமைக்கப்போவது பாஜகவா அல்லது காங்கிரஸா? என்ற கேள்வி அனைவரிடமும் தலை தூக்கியுள்ளது.


source https://news7tamil.live/will-the-bjp-form-the-government-in-the-middle-of-the-two-major-parties-that-have-lost-their-absolute-majority-congress.html