செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கன அடியாக அதிகரிப்பு!

 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகா, கேரள மாநிலங்களில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து கபினி அணை, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு உபரிநீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த 11ம் தேதி மாலை நிலவரப்படி விநாடிக்கு 23,000 கனஅடியாகவும், நேற்று காலை 30,000 கன அடியாகவும் அதிகரித்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 43,000 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் ஐந்தருவி, பெரியபாணி, சினி அருவி, பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

மேலும்,ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அருவிகளில்  28 வது நாளாக தடை விதித்துள்ளது. மேலும், பரிசல் இயக்க 2வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதாக நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



source https://news7tamil.live/the-flow-of-water-in-okanagan-cauvery-river-has-increased-to-43000-cubic-feet.html