செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

இந்தியாவின் சிறந்த கல்லூரிகள் பட்டியல்; டாப் 20-ல் தமிழ்நாட்டின் 6 கல்லூரிகள்

 nirf college

மிராண்டா ஹவுஸ் கல்லூரியை தோற்கடித்து, இந்துக் கல்லூரி இந்த ஆண்டு என்.ஐ.ஆர்.எஃப் (NIRF) தரவரிசையில் டாப் ‘கல்லூரிகள்’ பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தில்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸ் (2017 முதல்) தொடர்ந்து சிறந்த கல்லூரியாக தேர்ந்தெடுக்கப்பட்டது, இருப்பினும், இந்த ஆண்டு இரண்டாவது இடத்தையே பெற முடிந்தது.

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) தரவரிசை 2024ஐ கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

மூன்றாவது இடத்தை செயின்ட் ஸ்டீபன் கல்லூரி மற்றும் கொல்கத்தாவின் ராம கிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி இணைந்து பெற்றுள்ளன. ஆத்ம ராம் சனாதன் தர்மக் கல்லூரி ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.

செயின்ட் சேவியர் கல்லூரி, பி.எஸ்.ஜி.ஆர் (PSGR) கிருஷ்ணம்மாள் கல்லூரி, லயோலா கல்லூரி, கீரோரிமல் கல்லூரி மற்றும் பெண்களுக்கான லேடி ஸ்ரீ ராம் கல்லூரி ஆகியவை மற்ற சிறந்த கல்லூரிகளில் அடங்கும்.

டாப் 20 கல்லூரிகளின் பட்டியல்

1). இந்துக் கல்லூரி

2). மிராண்டா ஹவுஸ்

3). செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி

4). ராம கிருஷ்ணா மிஷன் விவேகானந்தா நூற்றாண்டு கல்லூரி

5). ஆத்மா ராம் சனாதன் தர்மம் கல்லூரி

6). செயின்ட் சேவியர் கல்லூரி

7). பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோவை

8). லயோலா கல்லூரி, சென்னை

9). கிரோரி மால் கல்லூரி

10). பெண்களுக்கான லேடி ஸ்ரீ ராம் கல்லூரி

11) பி.எஸ்.ஜி (PSG) கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை

12) ஹன்ஸ் ராஜ் கல்லூரி

13). பிரசிடென்சி கல்லூரி, சென்னை

14). மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை

15). தியாகராஜர் கல்லூரி, மதுரை

16). தேஷ்பந்து கல்லூரி

17). ராமகிருஷ்ணா மிஷன் வித்யாமந்திரா

18). ஆச்சார்யா நரேந்திர தேவ் கல்லூரி

19). ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரி

20). ராஜகிரி சமூக அறிவியல் கல்லூரி

இந்த ஆண்டும், முதல் 10 கல்லூரிகளில் ஆறு டெல்லியைச் சேர்ந்தவை, கொல்கத்தாவில் இருந்து இரண்டு, கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் இருந்து தலா ஒன்று என டெல்லி சிறந்த கல்லூரிகளின் பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகிறது.

டாப் 20 இடங்களில் தமிழ்நாட்டிலிருந்து சென்னையில் 3 கல்லூரிகள், கோவையில் 2 கல்லூரிகள், மதுரையில் ஒரு கல்லூரி இடம் பெற்று அசத்தியுள்ளன.

டெல்லி பல்கலைக் கழகத்தின் கல்லூரி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

2022 இல், டெல்லி பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஸ்டீபன்ஸ் முதல் 10 கல்லூரி தரவரிசையில் இருந்து தள்ளப்பட்டது. செயிண்ட் ஸ்டீபன்ஸ் 2020 இல் 4 வது இடத்தில் இருந்து 2021 இல் 8 வது இடத்திற்கு சரிந்தது. 2022 இன் முதல் 10 பட்டியலில் இடம்பெற்ற மற்ற இரண்டு டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகள் 7 வது இடத்தில் உள்ள ஆத்மா ராம் சனாதன் தர்மம் (ARSD) கல்லூரி மற்றும் 10 வது இடத்தில் உள்ள கிரோரி மால் கல்லூரி (KMC) ஆகும். 


source https://tamil.indianexpress.com/education-jobs/best-college-in-india-heres-the-top-10-nirf-2024-6852095