வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

மக்களவையில் வஃக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல்!

 7 8 24 

மக்களவையில் புதிதாக கொண்டு வரப்பட்ட வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

வக்ஃபு வாரியம் தொடர்பான சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். வக்ஃபு வாரிய சொத்துக்களை ஆட்சியரிடம் பதிவு செய்ய வேண்டும் என சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. சட்ட திருத்தத்திற்கு பின் வக்ஃபு வாரிய சொத்தின் உரிமையை அரசின் ஆவணங்கள் உறுதிப்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி,  கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வஃக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1995ம் ஆண்டு வஃக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போதுள்ள வக்பு வாரிய சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. இந்த சட்ட திருத்த மசோதாவில் வஃக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது. வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குப்படுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

source https://news7tamil.live/waqf-amendment-bill-filed-in-lok-sabha.html

Related Posts: