வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

வக்ஃபு சட்ட மசோதா “அரசியலமைப்பின் மீதான அடிப்படை தாக்குதல்” – வேணுகோபால் விமர்சனம்!

 

வக்ஃபு வாரியம் தொடர்பான சட்ட திருத்த மசோதா “அரசியலமைப்பின் மீதான அடிப்படை தாக்குதல்” என காங்கிரஸ் எம்பி வேணுகோபால் தெரிவித்துள்ளார். 

வக்ஃபு வாரியம் தொடர்பான சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். வக்ஃபு வாரிய சொத்துக்களை ஆட்சியரிடம் பதிவு செய்ய வேண்டும் என சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. சட்ட திருத்தத்திற்கு பின் வக்ஃபு வாரிய சொத்தின் உரிமையை அரசின் ஆவணங்கள் உறுதிப்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மசோதாவிற்கு இந்திய கூட்டணி எம்பிக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது காங்கிரஸ் எம்பி வேணுகோபால் பேசியதாவது;

“இந்த மசோதா மதப்பிளவை உண்டாக்கும், சமூகங்களுக்கு இடையே வெறுப்பை தூண்டும்.  அரசியலமைப்பின் மீதான அடிப்படை தாக்குதல் இது. சமூகங்களுக்கிடையில் மோதலையும், கோபத்தையும் உருவாக்கி எல்லா இடங்களிலும் வன்முறைக்கு இட்டுச் செல்வதே பாஜகவின் நோக்கம். மத சுதந்திரத்தின் மீதான நேரடி தாக்குதல் இது. அடுத்து கிறிஸ்தவர்களை குறி வைப்பீர்கள், பின்னர் ஜெயின்கள். இதுபோன்ற பிரித்தாளும் அரசியலை இந்திய மக்கள் ஏற்க மாட்டார்கள். மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனப் பேசினார்.


source https://news7tamil.live/waqf-bill-fundamental-attack-on-constitution-congress-mp-venugopal.html