புதன், 7 ஆகஸ்ட், 2024

இருபுறமும் சாலை இல்லை: திறந்தவெளியில் கட்டப்பட்ட பாலம்;

 https://indianexpress.com/article/india/bihar-village-bridge-open-field-no-road-9498758/?ref=hometop_hp

சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணி முடியாததால் பாலம் மட்டும் கட்டப்பட்டுள்ளது.

பீகாரில் இரு புறமும் சாலைகள் இல்லாத நிலையில், திறந்த வெளியில், 35 அடி பாலம் கட்டியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள ராணிகஞ்ச் கிராமத்தில், இருபுறமும் சாலை இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல், திறந்தவெளியில் 35 அடி பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் எதற்காக என்பது குறித்து பலருக்கும் ஆச்சரியம் கலந்த கேள்வி எழுந்துள்ள நிலையில், இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வகத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து அதிகாரிகளின் கூற்றுப்படி, முதல்வர் கிராமத்தின் சதக் திட்டத்தின் கீழ் பர்மானந்த்பூர் கிராமத்தில் 2.5 கிமீ சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டன, ஆனால் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தும் செயல்முறை முடிக்கப்படவில்லை. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாலம் இருக்கிறது.  மேலும் அங்கு சாலை அமைக்கப்பட்ட பிறகு வயலின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் தண்ணீர் செல்ல அனுமதிக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

சாலை பணிகளுக்காக ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் பாலம் கட்டப்பட்டது, ஆனால் அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி இன்னும் முடிக்கப்படாததால் அருகில் சாலை அமைக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஊரகப் பணித் துறை அதிகாரி ஒருவர், "நிலத்தைக் கையகப்படுத்தி முதலில் சாலை அமைக்கத் தொடங்குவதற்குப் பதிலாக, கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 35 அடி பாலம் கட்டப்பட்டது என்று கூறியுள்ளார். ஆனாலும் இந்த திட்டத்தைப் பற்றி கிராம மக்களுக்கு எந்த தகவல்களும் தெரியாத நிலையில், ஒரு வயலின் நடுவில் எதற்காக மேம்பாலம் கட்டியுள்ளனர் என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். 

இது குறித்து கிருத்யானந்த் மண்டல் என்பவர் கூறும்போது, “இந்த பாலம் ஆறு மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இது ஏதேனும் ஒரு பெரிய திட்டமாக இருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் எந்த வேலையும் செய்யப்படாததால், எதிர்கால திட்டமிடல் பற்றிய குறிப்பு எதுவும் இல்லாததால், அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வர விரும்பினோம் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, அராரியா மாவட்ட மாஜிஸ்திரேட் இனாயத் கான் கூறும்போது, “கிராமப்பணித்துறையின் பொறியாளர்களிடம் விரிவான திட்ட அறிக்கையை கேட்டுள்ளேன். சீரமைப்பின்படி பணிகள் நடக்கிறதா என்பதை அறிய விரும்புகிறோம். இது குறித்து முழு உண்மையை அறிய விரிவான அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றாலும், நடுப்பகுதியில் இருந்து வேலை தொடங்கப்பட்டது போல் தெரிகிறது. 

எப்படியிருந்தாலும், திட்டத்தின் நிலையை விரைவில் அறிந்து கொள்வோம், நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடையாததால், திட்டத்தின் மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/india/bihar-village-bridge-open-field-no-road-6804136