5 8 2024
வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.
வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. அந்த வகையில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,636 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 79,345 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. மேலும் தேசிய பங்குச்சந்தையின் குறியீடான நிஃப்டி 485 புள்ளிகள் சரிந்து 24,232 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள அப்பலோ மருத்துவமனை மற்றும் சன் பார்மா ஆகிய பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமான நிலையில் மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, டைட்டன் கம்பெனி மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிவுடன் வர்த்தகமானது. முன்னதாக இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,393 புள்ளிகள் சரிந்து 78,588 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 405 புள்ளிகள் குறைந்து 24,302 புள்ளிகளாக வர்த்தகமான நிலையில் பின்னர் அதிலிருந்து மீண்டது.
source https://news7tamil.live/the-stock-market-suffered-a-sharp-decline.html