நடப்பாண்டு ஜூலை அமெரிக்க அரசியலில், அரசியல் பூகம்பங்களின் மாதமாக திகழ்ந்தது. அமெரிக்க அரசியல் நிலப்பரப்பில் ஏற்படும் முன்னேற்றங்கள் உலகின் பிற பகுதிகளை பாதிக்கும் என்பதால், என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
முதலாவதாக, முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பினார்.
இரண்டாவதாக, டிரம்ப் தன்னை விட 40 வயது இளைய ஓஹியோவைச் சேர்ந்த செனட்டரான ஜே டி வான்ஸை துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தார்.
மூன்றாவதாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜனாதிபதிப் போட்டியிலிருந்து விலகினார். நான்காவதாக, துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் இப்போது ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக உள்ளார், ஏனெனில் அவர் முக்கிய ஜனநாயகத் தலைவர்களின் ஒப்புதலைப் பெற முடிந்தது.
இந்த நான்கு நிகழ்வுகளும் அமெரிக்க அரசியலையும் தேர்தலையும் முன்பை விட சுவாரஸ்யமாக்கியுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை உலகம் உற்று கவனிக்கிறது.
குடியரசுக் கட்சியினருக்கு...
டொனால்ட் டிரம்பிற்கு எதிரான படுகொலை முயற்சி, முன்னாள் ஜனாதிபதிகளான ரொனால்ட் ரீகன் (உயிர் பிழைத்தவர்) மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி (கொல்லப்பட்டவர்) போன்றவர்கள் மீதான படுகொலை முயற்சிகளை நினைவுபடுத்தியது. இது துப்பாக்கி கட்டுப்பாடு பற்றிய விவாதங்களுக்கு வழிவகுத்தது, இது நீண்ட காலமாக அமெரிக்க அரசியலை பாதித்து வரும் ஒரு பிரச்சினை ஆகும்.
இதற்கிடையில் டிரம்பின் துணை ஜனாதிபதி தேர்வும் அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன.
ஜனநாயகக் கட்சியின் பரப்புரை
ஜூன் மாதம் ஜனாதிபதி விவாதத்தில் அவரது பேரழிவுகரமான செயல்பாட்டிற்குப் பிறகு ஜனாதிபதி பிடனின் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகுவதற்கான முடிவு துரிதப்படுத்தப்பட்டது. அவரது வயது, உடல்நிலை, தடுமாற்றங்கள் அவருக்கு எதிராக அமைந்தன.
துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?
இதற்கிடையில், கமலா ஹாரிஸ் இப்போது சரியான துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் நோக்கில் நகர்கிறார்.
இவர் ஏற்கனவே ஆப்பிரிக்க-அமெரிக்கன் மற்றும் இந்திய-அமெரிக்க பாரம்பரியம் கொண்டவர். ஆகவே இவர் அமெரிக்க பூர்விகரான ஒரு வெள்ளையரை வேட்பாளராக தேடுகிறார்.
மேலும் கடந்த காலங்களில் இன்றுவரை அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிபர், துணை வேட்பாளர் பெண்ணாக இருக்க சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவு.
இது இந்தியாவிற்கு என்ன அர்த்தம்?
இந்தியாவின் கண்ணோட்டத்தில், ஹாரிஸின் ரன்னிங் மேட் யார் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். இது வரவிருக்கும் மாதங்களில் அவர்களின் கொள்கை நிலைகளை அடையாளம் காட்டும்.
மேலும், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதுமட்டுமின்றி, ஹாரிஸ் - அமெரிக்க நிர்வாகம் மற்றும் வெள்ளை மாளிகை அரசியலில் ஒரு பகுதியாக இருந்தவர் - இந்தியாவுடனான விவாதங்களில் உள்ள நுணுக்கங்களை அறிந்தவர்.
source https://tamil.indianexpress.com/explained/from-trump-rally-shooting-to-kamala-harris-as-new-candidate-what-july-meant-for-the-us-elections-6798740