புதன், 24 ஏப்ரல், 2013

பாஸ்போர்ட் விசாரணைக்காக பெண்களை காவல் நிலையத்துக்கு அழைக்கத் தேவையில்லை

பெண்கள், குழந்தைகளை காவல் நிலையத்துக்கு அழைக்கக் கூடாது: முதல்வர்

பெண்கள், குழந்தைகளை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, பாஸ்போர்ட் விசாரணைக்காக பெண்களைக் கூட காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்துகிறார்கள். இதனைத் தடுக்க வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, சி.ஆர்.பி.சி. சட்டத்தின்படி சாட்சியாக விசாரணை செய்யக் கூட பெண்களையும், குழந்தைகளையும் காவல் நிலையத்துக்கு அழைக்கக் கூடாது. அவர்களின் இருப்பிடத்துக்குச் சென்றுதான விசாரிக்க வேண்டும். எனவே பாஸ்போர்ட் விசாரணைக்காக பெண்களை காவல் நிலையத்துக்கு அழைக்கத் தேவையில்லை. அவ்வாறு நடைபெற்றிருந்தால், இனி இதுபோல நிகழாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

plz share...