திங்கள், 8 ஏப்ரல், 2013

News -இரு சிறுபான்மை இனத்தவரை உப ஜனாதிபதிகளாக நியமிக்க வேண்டும் – சோபித தேரர்

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை ஒழித்து சம்பிரதாய பூர்வமான ஜனாதிபதி முறைமையை ஏற்படுத்தி இரண்டு சிறுபான்மை இனத்தவரை உப ஜனாதிபதிகளாக நியமிப்பதற்கான அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் அமைச்சர்களின் எண்ணிக்கையை 25 ஆக மட்டுப்படுத்தி கட்சி மாறும் எம்.பி.க்களின் பதவியை பறிக்க வேண்டுமென்றும் அவ் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வியக்கத்தின் தலைவரான மாதுளுவாவே சோபித தேரரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மதத்தலைவர்கள், அரசியல் கட்சிகள் நாட்டு மக்கள் என அனைவரும் இலங்கைக்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை தேவையில்லை என எதிர்க்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் நண்பன் பொலிஸ்

Related Posts: