செவ்வாய், 16 ஏப்ரல், 2013

லயன் ஏர் விபத்தில்


லயன் ஏர் விபத்தில் தப்பிய சிங்கப்பூரர்கள் பயணம் செய்த 108 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் !
  

இந்தோனீசியாவின் பாலி தீவில் தரை இறங்கிய ‘லயன் ஏர்’ ஜெட் விமானம் ஓடு பாதையிலிருந்து விலகியதற்கான காரணங்களை அந்நாட்டின் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
 
•
 
இந்த விமானத்தில் பயணம் செய்த 108 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
 
•
 
இதே விமானத்தில் பயணம் செய்த சிங்கப்பூரர்களும் பாதுகாப்புடன் இருப் பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சுத் தெரிவித்தது.
“விமான விபத்தில் சிக்கிய  சிங்கப் பூரர்கள் பாதுகாப்புடன் நல்ல நிலையில் இருக்கின்றனர்,” என்று அமைச்சின் அறிக்கைக் குறிப்பிட்டது.
குறைந்தது இரு சிங்கப்பூரர்கள் இந்த விமானத்தில் பயணம் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 
 
•
 
சனிக்கிழமை அன்று பாலியில் உள்ள அனைத்துலக விமான நிலையத்தில் அந்த ‘லயன் ஏர்’ விமானம்  தரை இறங்கியது. அப்போது ஓடு பாதையி லிருந்து விலகி ஓடிய விமானம் கடலில் இறங்கியது. அதனைத் தொடர்ந்து இரண்டு பாகங்களாக விமானம் உடைந்தது.
இந்நிலையில் விமானத்தின் பாகங்கள் சேகரிக்கப்பட்டு விபத்துக்கான காரணங் களைத் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்புக் குழு ஆராய்ந்து வருவதாக இந்தோனீசிய போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் பம்பாங் இர்வான் தெரிவித்தார்.
 
•
 
ஏற்கெனவே விமானப் பயணத்தின் தகவல் பதிவுச் சாதனங்கள் அகற்றப்பட்டு விட்டதாக அவர் சொன்னார்.
தற்போது விமானத்தை கடற்கரைக்கு இழுத்து வருவதைப் பற்றி திட்டமிட்டு வருகிறோம் என்றார் அவர்.
 
•
 
விமானத்தின் வால் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும்  விமானி அறையின் குரல் பதிவுச் சாதனத்தைத் தேடி வரு கிறோம் என்றும் திரு பம்பாங் இர்வான் சொன்னார்.
 
•
 
இந்த விபத்தில் சிலர் நீந்தி கரை ஏறினர். கடலில் தத்தளித்தச் சிலர் ரப்பர் படகு மூலம் மீட்கப்பட்டனர். 
இந்நிலையில் காயம் அடைந்த சில பயணிகள் மருத்துமனையில் சிகிச்சை பெற்ற பிறகு நேற்று வீடு திரும்பினர்.

தகவல் நன்றி -நண்பன்
13/04/2013 லயன் ஏர் விபத்தில் தப்பிய சிங்கப்பூரர்கள் பயணம் செய்த 108 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் !

இந்தோனீசியாவின் பாலி தீவில் தரை இறங்கிய ‘லயன் ஏர்’ ஜெட் விமானம் ஓடு பாதையிலிருந்து விலகியதற்கான காரணங்களை அந்நாட்டின் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.