செவ்வாய், 16 ஏப்ரல், 2013

சரியத் தொடங்கியது தங்கம்....

சரியத் தொடங்கியது தங்கம்....

கடந்த 2011 அக்டோபர்லிருந்து இந்த எச்சரிக்கையை அவ்வப்போது பதிந்து வருகிறேன். 
தங்கத்தின் விலை மேலும் வீழும். இப்பொழுது 1400 $ ஆக இருப்பது 700 $ வரைச் சரிய அதிகமான வாய்ப்பிருக்கிறது. 
அதாவது இன்றைய மதிப்பிலிருந்து பாதியாக. ஏற்கனவே கடந்த 1 1/2 வருடத்தில் சர்வதேசச் சந்தையில் 30 % வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. 

வீழ்வதற்கான காரணங்கள் :

ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அந்தந்த நாடுகள் கையிருப்புகளை சந்தையில் விற்கின்றன. ஏற்கனவே “சைப்ரஸ்” விற்கத் தொடங்கி விட்டது.

மேலும் இத்தாலி & ஸ்பெயின் விரைவில் விற்க இருக்கின்றது என்ற பயமும் விலையை மேலும் சரியச் செய்கிறது. 

சீனாவின் வளர்ச்சி விகிதம் எதிர் பார்த்ததை விட மிகக் குறைவாக அறிவித்திருக்கின்றது. 

எனவே, நீண்ட கால முதலீட்டிற்காக தங்கம் வாங்குபவர்கள், இன்னும் சிறிது காலம் (1-2 வருடங்கள்) பொறுத்திருந்து வாங்கவும்.