வியாழன், 18 ஏப்ரல், 2013

Babri Masjid - Demolished - முலாயம்சிங் யாதவை

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவரும் 
மத்திய அமைச்சருமான பேனிபிரசாத் வர்மா அண்மைக்காலமாக தொடர்ந்து சமாஜ்வாடி 
கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவை விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் லக்னோவில் பேசிய பேணி பிரசாத் வர்மா, "பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின்போது, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அத்வானி போன்றவர்களை 
அப்போதைய முதலமைச்சர் முலாயம் சிங் சந்தித்து 
பேசினார்" என்று தெரிவித்தார். 

அதற்குப் பிறகு தான் பாபர் மசூதி பகுதிக்குள் 
கர சேவகர்களை அனுமதிக்க முலாயம் சிங் முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் அத்வானியும், மோடியும் என்று குற்றம் சாட்டிய 
போணிபிரசாத் வர்மா, அந்த லிஸ்டில் முலாயம் சிங்கையும் 
இணைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 

முலாயம் சிங் தற்போது அத்வானியை புகழ்ந்து பேசி 
வருவது குறித்து விமர்சனம் செய்து பேசியபோது, 
அத்வானியின் செயல்பாடுகளுக்கு  முலாயம் சிங் யாதவ் முன்பிருந்தே உடந்தை என்று கூறியுள்ளார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் 
பேணிபிரசாத் வர்மாவின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.