திங்கள், 8 ஏப்ரல், 2013

விளையாட்டு

இஸ்லாம் விளையாட்டுகளை ஒருப்போதும் தடைசெய்யவில்லை.ஆனால் அது நம்மை நம்முடைய வணக்கங்களைவிட்டு தடுப்பதாகவும்,மார்க்கம் தடைசெய்யபட்டவைகளை செய்ய தூண்டுவதாகவும் இருக்கக்கூடாது என்பதைத்தான் வலியுறுத்துகிறது.

அந்த வகையில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஹாசிம் ஆம்லா என்ற கிரிக்கெட் வீரர் இன்று ஒருநாள் போட்டியிலும் டெஸ்ட் போட்டியிலும் சர்வதேச வீரர்கள் பட்டியலில் தொடந்து முதலாம் இடத்தில் இருந்துவருகிறார்.ஆனால் அவர் இந்த புகழில் எள்ளலவும் இருமாப்பு கொள்ளாமல் மிகவும் அடக்கமாக நடந்துகொள்பவர் என்பது அவரிடம் நெருங்கி பழகும் நண்பர்களின் கருத்தாகும்.

விளையாட்டிற்காக மார்க்க விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள கூடாது என்பதற்காக இன்றுவரை இவர் ஹராமான விளம்பரங்களில் நடிப்பது இல்லை.ஐ பி எல் தொடரில் விளையாட பலகோடிகளை காண்பித்து அவருக்கு எத்தனையோ முறை அழைப்பு விடபட்டபோதும் ஆபாச நடனம் நடைபெறுகிறது என்ற காரணத்தால் அதில் விளையாட மறுத்துவிட்டார்.

தற்போது அவர் விளையாடும் தென்னாப்பிரிக்க அணியின் ஸ்பான்சர் ஒரு மதுபான கம்பனியாகும்.அதன்காரணமாக அந்த மதுபான கம்பெனியின் பெயரை அவரது சீருடையில் பொருத்தாமல் இருப்பதற்கு பிரதி மாதம் 500 டாலர் அபராதம் செலுத்திவருகிறார்.

ஆயிரக்கனகான சகொகதர்களை கொன்ற மோடியின் பணத்திற்கு முன்பு சோரம்போன இர்பான் பாட்டனும் ஆஸ்திரேலியாவில் இரவு விடுதிகளில் குடித்துவிட்டு விபச்சாரிகளுடன் ஆட்டம்போட்ட பாக்கிஸ்தான் வீரர்களும் இந்த ஆசிமை பார்த்து ஒரு முஹ்மீன் எப்படி வாழவேண்டும் என்று படிக்கட்டும்.

"படைத்த இறைவன் இதுபோன்ற மனஉறுதியையும்.ஈமானையும் நமக்கும் தந்தருள்வானாக...."