புதன், 3 ஏப்ரல், 2013

இலங்கை முஸ்லிம்களுக்கு நெருக்கடி - கலாநிதி யூஸுப் அல் கர்ழாவி கவலை




சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் ஒன்றியம் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இன மத வெறியர்களின் செயற்பாடுகள் குறித்து கவலைய டைந்துள்ளதாக தலைவர் கலாநிதி யூஸுப் அல் கர்ழாவி மற்றும் செயலாளர் நாயகம் அலி கர்ரஹ் தாகி ஆகியோர் கையொப்பமிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் பல பாகங்களிலும் முஸ்லிம்களுக்கெதிராக தினந்தோறும் இடம் பெரும் நிகழ்வுகளை மிகவும் கவலையுடன் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியம் அவதானித்து வருகிறது.

முஸ்லிம் மாதர் அணியும் ஹிஜாப் அவர்களது அடிப்படை சமய உரிமையாகும் அதனை இஸ்லாம் அவர்கள் மீது கடமையாக்கியுள்ளது, முஸ்லிம்களது அடிப்படை சமய உரிமைகளுக்கு அச்சுறுத்தல் விடப்படுவதனை அங்கீகரிக்க முடியாது. அதேபோன்று முஸ்லிம்கள் பௌத்த சமயத்தவருக்கு அச்சுறுத்தலானவர்கள் என்ற போலிக் குற்றச் சாட்டின் பெயரில் அவர்களை களங்கப் படுத்துவதும் அவர்களது வர்த்தக நிலையங்களை வழிபாட்டுத் தளங்களை தாக்குவதும் முஸ்லிம்களது பள்ளிவாயல்கள் மீது நடாத்தப் படும் தாக்குதல்கள் அவர்களது பொருளாதாரத்தை முடக்க முணைவதும் எந்த வகையிலும் அங்கீகரிக்கப் பட முடியாதவை.

இலங்கையில் சமாதானம் நிலவுகின்ற இந்த காலப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப் படும் கடைத் தனங்களை பொறுப்பு வாய்ந்த அரசு என்ற வகையில் அரசாங்கம் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும், சட்டமும் ஒழுங்கும் சகல் சமூகங்களுக்கும் பொதுவாக நிலை நிறுத்தப் படல் வேண்டும் அதனையே சகல் சர்வதேச சட்டங்களும் மதங்களும் வலியுறுத்துகின்றன., இன மத வெறியர்கள் தலை தூகுவதனை சட்டத்தை கையிலேடுப்பதனை அனுமதிக்கக் கூடாது அவ்வாறு அனுமதிப்பின் அதன் விளைவுகளை முழு தேசமும் அனுபவிக்க நேரிடும்.

இலங்கை வாழ் முஸ்லிம்களது இருப்புக்கும் பாதுகாப்பிற்கும் அடிப்படை சமய கலாச்சார உரிமைகளுக்கும் விடுக்கப் படுகின்ற சவால்களை உடனடியாக இலங்கை அரசாங்கம் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியம் வலியுறுத்துவதோடு, இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு ஒன்றியம் மற்றும் முஸ்லி முலகிலுள்ள சிவில் மற்றும் மனித உரிமைகளுக்கான அமைப்புக்கள் இலங்கை அரசின் மீதான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது.

முஸ்லிம்களது தலைமைகளுடன் இலங்கை அரசு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தி, இடம் பெரும் அச்சுறுத்தல்கல் குறித்து ஆராய விஷேட குழுக்களை நியமித்து சமாதான சகவாழ்வையும் முஸ்லிம்களது அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்து உத்தரவாதமளிக்குமாறு இலங்கை அரசை சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியம் கேட்டுக் கொள்கிறது.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் சவால்களுக்கு முன்னால் ஒரே அணியாக நின்று பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்படுமாறும், சமாதான சகவாழ்வை பேணி புரிந்துணர்வோடும் விட்டுக் கொடுப்புக்களோடும் நடந்து கொள்ளுமாறும் , எந்தவொரு நிலையிலும் வன்முறைகளை நாட வேண்டாம் எனவும் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியம் வேண்டிக் கொள்கிறது.

சமாதான சகவாழ்வை கருத்திற் கொண்டு ஹலால் சான்றிதழ் விவகாரத்தில் அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமா மேற்கொண்ட விட்டுக்கொடுப்புக்களை சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியம் வரவேற்கிறது.

இலங்கையில் என்றும் போல் இனங்களுக்கிடையில் சமாதான சகவாழ்வு இடம்பெறுவதனை உறுதி செய்ய எடுக்கப் படுகின்ற சகல நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கவும், முஸ்லிம்களது கள நிலவரங்கள் குறித்து ஆராயவும் அரசாங்கத்தோடும் முஸ்லிம் அறிஞர்களோடும் கலந்துரையாடவும் ஒரு உயர் மட்ட விஜயம் ஒன்றை இலங்கைக்கு மேற்கொள்ள விரும்புவதாகவும் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் சமாதன சகவாழ்வு நிலைத்து நிற்கவும் சமத்துவம் நீதி நிலைபெறவும் அதனடிப்படையில் பொருளாதார சுபீட்சம் மற்றும் அபிவிருத்தியை நோக்கி இலங்கை நகரவும் அந்த நாட்டின் அரசிற்கும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களிற்கும் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியம் தமது ஆசிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.