தூக்கில் போடு!...தூக்கில் போடு!....22 பேரையும் தூக்கில் போடு.... இந்தியாவின் அவமான சின்னங்களை தூக்கில் போடு!
குஜராத் கலவரத்தில் ஈடுபட்ட பஜ்ரங்கி, கோட்னானிக்கு தூக்கு?
புதன், 17 ஏப்ரல் 2013 14:31 அஹமதாபாத் : 2002ல் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள பஜ்ரங்கி, கோட்னானி ஆகியோருக்கு தூக்கு தண்டனை கோர குஜராத் அரசு அனுமதி அளித்துள்ளது.
குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு தீர்ப்பாயத்தில் நேரடியாக கலவரத்தில் ஈடுபட்டு முஸ்லீம்களை கொல்லவும் கொல்ல தூண்டினார்கள் எனும் அடிப்படையிலும் நரேந்திர மோடி அரசின் பெண் அமைச்சராக இருந்த கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 10 பேருக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
குஜராத் கலவரத்தின் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கவுசர் பீவியை கொலை செய்து அப் பெண்ணின் வயிற்றில் இருந்த சிசுவை சூலாயுதத்தால் குத்தி எடுத்து நெருப்பில் போட்டு எரித்த கொடுமையை தெஹல்கா முன் பகிரங்கமாக சொன்னவன் பாபு பஜ்ரங்கி என்பது நினைவு கூறத்தக்கது.
28 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட 10 நபர்களுக்கும் தூக்கு தண்டனை கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய மோடி அரசின் அனுமதியை சிறப்பு புலனாய்வு குழு கோரியது. 2012 ஆகஸ்டு 31 கோரப்பட்ட அனுமதிக்கு 7 மாதம் கழித்து குஜராத் அரசு அனுமதி வழங்கியுள்ளது. சாதாரணமாக கீழ் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 3 மாதங்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 24 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட 22 நபர்களுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் கால தண்டனை வழங்கவும், விடுவிக்கப்பட்ட 7 நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரவும் சிறப்பு புலனாய்வு குழு கோரிய மனு மீது குஜராத் அரசு இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை
.