வியாழன், 18 ஏப்ரல், 2013

சுவீடன் நாட்டில் முதன் முதலாக ஒலித்த பாங்கொலி!

சுவீடன் நாட்டின் "ஸ்டாக் ஹோம்" அருகில் அமைந்துள்ள "ஃபிட்ஜா" (Fittja) பள்ளிவாசலில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையன்று ஒலிபெருக்கியில் பாங்கு சொல்ல அனுமதிக்கப்பட்டது.

இந்த பள்ளிவாசல், சுவீடனில் உள்ள "பாட்கிர்கா" (Botkyrka) முனிசிபாலிடி எல்லையில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசலாகும்.

நீண்ட கால கோரிக்கைக்குப்பின் வியாழனன்று (10/04) கூடிய "பாட்கிர்கா" நகரமன்ற கூட்டத்தில் இதற்கான அனுமதியளிக்கப்பட்டது.

இதன்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் பகல் 12 முதல் 1 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் 3 முதல் 5 நிமிட நேரத்தில் ஒலிபெருக்கி மூலம் பாங்கு சொல்ல அனுமதி கிடைத்துள்ளது.

இந்த அனுமதி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சுவீடன் மக்கள், நேற்று முன்தினம் வெள்ளியன்று, பாங்கொலி கேட்டு அகமகிழ்ந்தனர்.

கடந்த 2007ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசலை சுற்றி சுமார் 1,500 முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.

சுவீடன் இஸ்லாமிக் அசோசியேஷன் தலைவர் இஸ்மாயீல் இத்தகவலை வெளியிட்டார்.