திங்கள், 15 ஏப்ரல், 2013

ஜாதியின் அடிப்படையில் வாக்களிக்கின்றனர்: மார்க்கண்டேய கட்ஜூ வேதனை



இந்தியாவில் 90 சதவிகிதம் பேர் சாதியின் அடிப்படையிலேயே தேர்தல்களில் வாக்களிப்பதாக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டம் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 90 சதவிகித இந்தியர்கள் ஆடு மாடுகளைப் போல கண்மூடித்தனமாக ஜாதி அடிப்படையில் வாக்களிப்பதாகவும், அதனால் தான் நாடாளுமன்றத்தில் அதிக கிரிமனல்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு சாதி, மத அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு நாட்டில், வாக்களிக்க தனக்கு விருப்பமில்லை எனவும் அவர் கூறினார்.
மேலும் மக்களின் அடிப்படை மனநிலையை மாற்றினால் மட்டுமே, ஊழலை ஒழிக்க முடியும் என கூறிய கட்ஜூ, அறிவியல் தொழில்நுட்பங்களை மறந்து, இன்னமும் போலிச் சாமியார்களையும், ஜாதகங்களையும் நம்பிக்கொண்டிருந்தால் இந்தியா எப்போதும் பின் தங்கிய நாடாகவே இருந்து விடும் என மார்க்கண்டேய கட்ஜூ வேதனையுடன் தெரிவித்தார்.
மார்ச் 31, 2013