பால்தாக்கரேயின் மறைவுக்காக கடைகள் அடைக்கப்பட்டதை விமர்சித்த பெண்களை கைது செய்த மும்பை போலீசார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு வலியுறுத்தியுள்ளார்.
மகராஷ்டிரா முதலமைச்சர் சவானுக்கு மார்க்கண்டேய கட்ஜு எழுதியுள்ள கடிதத்தில், உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
பந்த்துக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பது, மத உணர்வுகளை புண்படுத்தும் என்று கருதுவது முட்டாள்த்தனமானது என்று குறிப்பிட்டுள்ள கட்ஜு, இதில் தொடர்புடைய போலீசாரை சஸ்பெண்ட் செய்து, அவர்களை கைது செய்து, கிரிமினல் வழக்குகள் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கருத்து சுதந்திரம் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களின் அடிப்படை உரிமையாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், நாம் ஜனநாயக நாட்டில் இருப்பதாகவும், பாசிச சர்வாதிகார நாட்டில் இல்லை என்றும் தனது கடிதத்தில் கட்ஜு கடுமையாக விமர்சித்துள்ளார்.இந்த கைது நடவடிக்கைக்கு சுப்பிரமணியசாமியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 20, 2012