செவ்வாய், 2 ஏப்ரல், 2013

பெண்களை அடிமைபடுத்துவது யார் ?


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

ஒரு பள்ளிகூடம். இரு தோழிகள் இருக்காங்க. 
ஒருவர் முஸ்லீமல்லாதவர். இன்னொருவர் முஸ்லீம். 
இருவரும் கட்டுகோப்பான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். விளையாட்டு போட்டிக்காக வெளியூர் செல்ல அனுமதி வேண்டி வீட்டில் கேட்க, வீட்டினர் மறுக்கிறார்கள். பெண் குழந்தையை எப்படி துணை இல்லாமல் வெளியூர்க்கு அனுப்புவது என்ற கவலை இரு குடும்பத்தினருக்கும்!


அடுத்த நாள் பள்ளியில் ஆசிரியரிடம்,
முஸ்லீமல்லாத பெண்- எங்க வீட்டில் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க
ஆசிரியர்-ம் சரி போ!

முஸ்லீம் பெண்- எங்க வீட்டில் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க
ஆசிரியர்- உங்க ஆளுங்களே இப்படிதான்... பொண்ணுங்கள் எங்கும் விடுறதில்ல, மொகத்த மூடுன்னு ஓவர்ரா கன்ட்ரோல் பண்ணி அடிமைபடுத்துறாங்க... எப்பதான் திருந்த போறாங்களோ..................................
இதுதான் இன்றைய நிலை!!!
இஸ்லாமிய பெண் என்றாலே அடிமைப்படுத்தப்பட்டவள் என்று பரிதாபமாக பார்க்கப்படுகிறது. ஆக்சுவலி முஸ்லீமல்லாத குடும்பத்தாருக்கு தன் பெண் மேல் என்ன பயம் இருக்குமோ அதே தான் அந்த இஸ்லாமிய குடும்பத்திற்கும் இருக்கு... ஆனால் சமுதாயத்தின் பார்வையில்?????????!!!!!!!!


எங்களை பார்த்து நீங்க பரிதாபப்படுறீங்களா??? ஏன் படணும்? என்ன அவசியம் வந்தது??? கீழே உள்ளதெல்லாம் வாசிங்க.... அதுக்கப்பறம் முடிவு பண்ணுங்க!!!

சொத்துரிமை:

ஆண்களை போலவே பெண்களுக்கும் சொத்தில் பங்குண்டு! இதுதான் எல்லா எடத்துலையும் இருக்கே?? என்னமோ இவங்களுக்கு மட்டும் இருக்குறமாதிரி எதுகெடுத்தாலும் மதம் மதம்னு ஏன் அலையுறீங்கன்னு கேக்குறீங்களா???? 1956 ஜூலை 4ம் தேதி அன்று இந்திய (இந்து)வாரிசு சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் தான் சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டு (தனி சொத்தில் மட்டும். பங்கு சொத்தில் இல்லை) என இந்திய அரசியலமைப்பு சொன்னது! 2005ம் ஆண்டு வெளிவந்த சட்டதிருத்தத்தின்படி தனிசொத்திலும் பங்குசொத்திலும் உரிமை உண்டு என கூறப்பட்டது. அதுக்கு முன்னாடிலாம் "சீர் செனத்தி செஞ்சாச்சுல??? இனி என்னாத்துக்கு இங்கே வார்ரவ? எல்லாம் எம்மவனுக்குத்தேன்"ன்னு சட்டம் பேசிட்டிருந்தாங்க நம்ம பெற்றோர்ஸ்! ஆனால் 7ம் நூற்றாண்டிலேயே இஸ்லாமிய பெண்களுக்கு சொத்தில் உரிமை கிடைத்துவிட்டது. எவ்வித காத்திருப்புகளும் இல்லை! எவ்வித போராட்டங்களும் இல்லை! எவ்வித கெஞ்சுதல்களும் இல்லை! இந்த பங்கீடு ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் கட்டாயக் கடமை ஆகும். இதை நிறைவேற்றியே ஆக வேண்டும்.
இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு. என்று உங்கள் பிள்ளைகள் விசயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகின்றான். அல்-குர்ஆன் (4:11)
குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்குண்டு. பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்குண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை. அல்-குர்ஆன் (4:7)

திருமண சம்மதம் :

மனதிற்கு விருப்பமில்லாத ஒருவனை காட்டி திருமணம் செய்யும் படி பெற்றோர் எம்மை வற்புறுத்த முடியாது. திருமணத்திற்கு எம் சம்மதம் தான் முதல் முக்கியமான விஷயம்.
விதவைப்பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெறவேண்டும். கன்னி பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - ஆதார நூல்: புகாரி)

பெண்களின் சம்மதத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறாங்க பாருங்க! பெண்ணை அடிமைபடுத்துவதாகவோ அல்லது உரிமைகளை நசுக்கும் மதமாகவோ இருந்தா இதில் ஏன் கவனம் செலுத்தி பெண்ணின் சம்மதத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?சிந்திப்பீர்களா?

இப்படிதான் ஒருமுறை ஒரு பொண்ணு வந்து நபி (ஸல்) அவர்களிடம் "எங்கப்பா எனக்கு பிடிக்காத நபரை திருமணம் செய்து வைக்கபாக்குறாரு. எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லை"ன்னு சொல்லிட்டாங்க. உடனே அதற்கு தீர்ப்பு சொன்ன நபி (ஸல்) அவர்கள் "இந்தத் திருமணம் ஆகுமான திருமணம் அல்ல! இது செல்லாது! நீ விரும்பியவரை மணம் முடித்துக் கொள்ள உனக்கு உரிமை இருக்கிறது!” என்று கூறி என் திருமணத்தை ரத்து செய்தார்கள்.
ஒரு பெண்ணின் சம்மதம் இல்லைன்னா கல்யாணமே ரத்தாம்! :-)

இது பெண்ணின் உரிமை! சமுதாயம் தான் கொடுக்கணும். ஏன் மதத்தை தூக்கிட்டு அலையுறீங்கன்னு கேக்குறீங்களா??? ம்ஹும்ம்ம்... எங்கம்மா அப்பா கொடுக்காத உரிமையை/சமுதாயம் மறுத்த உரிமையை குர் ஆனின் இறைவசனம் தான் வாங்கிகொடுத்துச்சு!
மறுமண உரிமை :

விவாகரத்தானாலோ அல்லது கணவன் இறந்தாலோ யாரும் எம்மை வெள்ளைபுடவை கட்டி அழகுபார்ப்பதில்லை! அதன் பின்னும் எம் பெண்களுக்கு வாழ்க்கை இருக்கு. அவளுக்கு மறுமணம் புரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது சமுதாய உரிமை! இத மதம் தான் கொடுக்கணுமா? ஏன் மதத்தை உரிமையோடு கலக்குறீங்கன்னு கேக்குறீங்களா??? வேறொன்னும் இல்லைங்க... சமுதாயம் அவர்களை விதவைன்னு முத்திரைக்குத்தி, இயல்பை மாற்றி, மூலையில் உக்கார வைத்தபோது மதம் தான் "நீ நீயாகவே இரு"ன்னு சொல்லி கொடுத்துச்சு! இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கும் விதவை பெண்களின் நிலைக்கு இஸ்லாத்தில் எப்போதோ தீர்வு சொல்லப்பட்டுவிட்டது!
பெண்கல்வி :

அடுத்ததாக படிப்பு! இஸ்லாம் பெண்கல்வி மறுப்பதாக பலர் கருதுகிறார்கள். இதுவும் கட்டுக்கதையே! இன்றைய காலகட்டத்தில் தான் படிப்பின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்திருக்கிறார்கள். முன்பு பெண் கல்வி என்பது சமுதாயத்தில் மறுக்கப்பட்ட ஒன்றுதான்! அடுப்பூதுவதும் அப்பளம் சுடுவதும் தான் பெண்ணின் நிலை என்ற இழிநிலையை தடுத்து ஆணை போலவே பெண்ணிற்கும் கல்வி கற்கும் உரிமையை வழங்கியிருக்கிறது. அதுவும் 1400 வருசங்களுக்கு முன்பே...
கல்வியைத்தேடுவது ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும் என்பது நபி மொழியாகும். (ஆதார நூல்: இப்னுமாஜா)
பெண்களை கொடுமைபடுத்துகிறதா?

பெரும்பாலனவர்களின் எண்ணம் இதுவே! இஸ்லாம் பெண்களை கேவலாக நடத்துவதாகவும், அவர்களை சதைபிண்டமாகவும் மட்டுமே பாவிக்கிறது எனவும் பலவாறாக விமர்சிக்கிறார்கள். ஆனால் இஸ்லாம் பெண்களை ராணிகளாய் நடத்துவது ஏனோ ஏற்க மறுக்கிறார்கள்...

இதோ சில உதாரணங்கள் :
உங்களுக்கு உங்கள் மனைவியர்மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள்மீது சில உரிமைகள் உள்ளன. (திர்மிதி)
உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே." (திர்மிதி)
அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத் தன்மையுடனும்) நடந்துகொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் அநேக நன்மைகளை வைத்திருக்கலாம். (அல்குர்அன் 4:19)
எந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்." (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)

இவையெல்லாம் இஸ்லாமிய பெண்மணிகள் சங்கம் அமைத்து, ரோட்டில் கொடிதூக்கி, போராட்டம் பண்ணி, நீதிமன்றம் மனித உரிமை கழகம்ன்னு போராடி ஒவ்வொரு முறையும் பிச்சை கேட்டு வாங்கிய சுதந்திரம் இல்லை! இயல்பாகவே இஸ்லாம் எங்களுக்கு ஏற்படுத்தி தந்தவை!

இறைவன் கொடுத்த சிந்திக்கும் திறன் இன்னும் நம்மிடம் அப்படியே தான் இருக்கு. திறந்த மனதுடன் முன்முடிவில்லாது யோசிங்க

Related Posts:

  • திடல் தொழுகை...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பில்  பெருநாள் திடல் தொழுகை...! InShaAllah on 7.30 am at SENGULAM , Near Aysha Madras on 1… Read More
  • பேய், பிசாசு உண்டா ? அளவற்ற அருலாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...மனித வாழ்வில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வை அளிக்கும் வாழ்க்கை நெறியே இ… Read More
  • #குர்பானியின்சட்டங்கள் யார்மீது கடமை?இவ்வளவு பணம் இருந்தால்தான் குர்பானி கடமை என்று திருக்குர்ஆனிலே அல்லது நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. யாருக்கு ஜகாத் கடமையோ அவர்கள்தான் கு… Read More
  • Attention Dear Readers, due to maintenance process are going, some pages are cannot be viewed, Sorry for the inconvenient, InshaAllah- Soon problem will solved… Read More
  • பள்ளி வாகனம் விபதுகுள்ளனது 13/09/2013 முபட்டி  -மாலை 3.30 மணியளைவில்   மெஜஸ்டிக்  பள்ளி வாகனம்  விபதுகுள்ளனது.  பூலாம்பட்டி   அருகே கட… Read More