செவ்வாய், 16 ஏப்ரல், 2013

Gujarat - Modi's Governments

மோடியின் ஆட்சியில் ஒவ்வொரு குஜராத் வாசியின் தலையிலும் ரூ.26 ஆயிரம் கடன் சுமை! : திக்விஜய் சிங்!
இந்தூர் செல்லும் வழியில் ஷாஜாபூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறியதாவது, குஜராத் மிளிர்கிறது என்று போகுமிடம் எல்லாம் நரேந்திர மோடி பேசி வருகிறார். அவர் முதன்முறையாக குஜராத்தின் முதல் மந்திரியாக பதவியேற்ற போது அம்மாநிலத்தின் மொத்த கடன் ரூ.26 ஆயிரம் மட்டும்தான். 
 
ஆனால், இன்றைய கடன் சுமை 1 லட்சத்து 72 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, ஒவ்வொரு குஜராத் வாசியின் தலையிலும் ரூ.26 ஆயிரம் கடன் சுமை ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கோலை வைத்துப் பார்க்கப்போனால், குஜராத் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது என்பது புரிந்துவிடும்.




மிளிருவதாக மோடி கூறும் குஜராத்தில், ஆண் - பெண்ணிற்கிடையே சமூக ஏற்றத்தாழ்வு விரிவடைந்துக்கொண்டே போகிறது. இன்னும் கூட ஆறுகளில் இருந்து தலித் மக்கள் தண்ணீர் எடுப்பது தடை செய்யப்படுகிறது.