ஈரானில் கடும் நிலநடுக்கம் : 40 பேர் பலி..
பாகிஸ்தன் எல்லைப்பகுதியை மையமாகக் கொண்டு இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மாலை 4.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஈரானை கடுமையாகத் தாக்கியது. அரபு நாடுகள் மற்றும் இந்தியாவின் வடக்கு பகுதிகளும் தப்பவில்லை.
ஈரானில் இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டன. இது ரிக்டர் அளவு கோலில் 8 மற்றும் 7.8 ஆக பதிவாகியிருந்தது. வீடுகள், அலுவலகங்கள் பயங்கரமாக குலுங்கியதால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். கட்டிடங்கள் இடிந்து விழுந்து, 40 பேர் வரை இறந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
துபாயில் இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.5 ரிக்டராக பதிவாகியிருந்தது. இதேபோல் பக்ரைன், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் குவெட்டா, பெஷாவர், ஐதராபாத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். பலுசிஸ்தான் பகுதியில் 5 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் பயத்தில் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சம் அடைந்தனர். ஆனால் இந்தியாவில் நிலநடுக்க பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
++++++++++++++++++++++++++++++++++
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளார்.
வரும் மே மாதம் 11 ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட, முன்னாள் அதிபர் முஷாரஃப் நான்கு தொகுதிகளில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதில், சித்ரல் தொகுதியில் மட்டும் இவரது வேட்புமனு ஏற்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் தீர்ப்பாயம், சித்ரல் தொகுதியில் போட்டியிடுவதற்கான முஷாரஃப்பின் மனுவையும் இன்று நிராகரித்தது.
******************************************************************
அமெரிக்காவில் தொடர் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வருடாந்திர மராத்தான் போட்டி நேற்று உற்சாகமாக தொடங்கியது. சுமார் 27 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த மராத்தான் போட்டியைக் காண பல்லாயிரக்கணக்கானோர் பாஸ்டனில் கூடியிருந்தனர்.
போட்டியாளர்கள் வெற்றிக் கோட்டை நெருங்கிய போது, அதன் அருகே சுமார் 100 மீட்டர் இடைவெளியில் 2 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலியாயினர். 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களில் 17 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறை, புலனாய்வுத்துறை, காவல்துறை அதிகாரிகளுடன் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆலோசித்தார். பின்னர் பேசிய ஒபாமா, குண்டு வெடிப்புக்கு காரணமான அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று உறுதிபடக் கூறினார்.
குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெறும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவருக்கு சதியில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இதனை உறுதிப்படுத்த மறுத்துவிட்ட பாஸ்டன் நகர காவல்துறையினர், குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறியுள்ளனர்.
பாஸ்டன் நகர காவல்துறை, மசாசூசெட்ஸ் மாகாண காவல்துறை, அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ ஆகியவை இணைந்து குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ளன. பாஸ்டன் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், சிகாகோ உள்பட அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐநா பொதுச்செயலாளர் பான்-கி- மூன் மற்றும் பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரும் பாஸ்டன் இரட்டைக் குண்டுவெடிப்பை கண்டித்துள்ளனர்.
படங்கள்:
***********************************************************
பப்புவா நியூகினியாவில் பூகம்பம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு
பப்புவா நியூகினியாவிலும் இன்று சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 புள்ளி 6 ஆக பதிவானது. போகைன்வில்லே தீவில் உள்ள பன்குனா நகரத்தின் தென்மேற்கே 125 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணி அளவில் நேரிட்ட நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக புவி இயல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
சத்தீஷ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட் தீவிரவாதிகள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
சத்தீஷ்கரில் பாதுகாப்புப் படையினர் அதிரடித் தாக்குதல்: நக்ஸலைட்டுகள் 10 பேர் சுட்டுக்கொலை
சத்தீஷ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட் தீவிரவாதிகள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுக்மா மாவட்டத்தின் புவார்தி கிராமத்தில் இந்த மோதல் நடைபெற்றதாக காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் ஷந்திலியா தெரிவித்துள்ளார். வனப்பகுதியில் உள்ள இந்த கிராமத்தில் நக்ஸலைட் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, ஆந்திர மாநில சிறப்புப் படையினரும், சுக்மா மாவட்ட காவல்துறையும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸலைட்டுகள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் 10 நக்ஸலைட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 6 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் இருந்து ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
******************************************************************************
31 Dead and over 200 injured in Baghdad bombings today, it's not even on the front page of BBC news anymore. Perspective.
Don't sympathise only with those that the media sympathises with.
31 Dead and over 200 injured in Baghdad bombings today, it's not even on the front page of BBC news anymore. Perspective.
Don't sympathise only with those that the media sympathises with.