நாட்டிற்கு எல்லா மதங்களையும் அனுசரித்து வழிநடத்தகூடிய பிரதமர்தேவை.ஒரு மதத்தவரை ஏற்றியும் மற்றமதத்தவரை தூற்றியும் இங்கு யாராலும் ஆட்சிசெய்துவிடமுடியாது. சிறுபான்மைமக்களை ஒடுக்கி சர்வாதிகார ஆட்சியை நிறுவிவிடலாம் என்று கனவுகாண்பவர்கள் எமர்ஜன்சி காலத்தில் இந்திராகாந்திக்கு ஏற்பட்டநிலையை சிந்தித்துபார்க்கவேண்டும். அரசியலில் சமரசம் செய்துகொள்வது என்பது சாதாரண விஷயமாகும்.ஆனால் மதசார்பற்றநிலையை மட்டும் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளமாட்டோம்.அதற்காக ஆட்சியை இழக்க நேரிட்டாலும் பரவாயில்லை. இந்நாட்டில் முஸ்லீம்களும் ஹிந்துக்களும் சம உரிமை உள்ளவர்கள்.நாம் ஒற்றுமையாக வாழ்வதை அங்கிகரிக்கும் பிரதமர்தான் நமக்குதேவை.மதங்களுக்கிடையில் பிரிவினையை உண்டாக்கி அதில் குளிர்காய நினைக்கும் சக்திகளை மக்கள் ஒருநாள் துடைத்தெரிந்துவிடுவார்கள்." என்று வரலாற்று சிறப்புமிக்க கருத்துக்களை நிதீஷ்குமார் கூறியுள்ளார். ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டத்தில் நேற்று பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சியின் நிலைபாட்டை விளக்கியும் மோடியின் பொய் பிரச்சாரங்களை கடுமையாக விமர்சித்தும் பேசிய விஷயங்கள் தேசிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.ஆனால் தமிழக ஊடகங்களால் இது முற்றிலும் இருட்டடிப்பு செய்ய பட்டுள்ளது.அவர் பேசியவற்றின் சாராம்சங்கள் இதோ.... "பிகாரில் நான் ஆட்சிக்கு வந்தபோது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டும் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியும் இருந்தது.ஆனால் என்னுடைய கடின உழைப்பால் இன்று பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளேன்.ஆனால் ஊடகங்கள் அதனை பாராமுகமாக இருந்துவருகிறது. நான் (மோடியைபோல்)மாநிலத்தை முன்னேற்றிவிட்டேன் என்று சொல்லிவிட்டு நகரங்களில் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டிவிட்டு கிராமங்களை இருளடைய செய்துவிடவில்லை.முன்னேற்றம் என்பது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதாகும்.அதனை செய்யாமல் கட்டிடங்களை எழுப்பி யாருக்கு என்னபயன்? இன்று (குஜராத்தில்)மின் உற்பத்தி செயலிழந்து போய்விட்டது.பலகிராமங்களில் அடிப்படை வசதியான தண்ணீர்வசதி இல்லை.பெரும்பாலான மக்கள் பசிபட்டினியில் வாடுகின்றனர்.ஒரு மாநிலத்தில் தண்ணீர் மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளில் இவ்வளவு தட்டுப்பாடு இருக்குபோது அதனை எவ்வாறு முன்னேற்றமாநிலமாக அங்கிகரிக்க முடியும்.இதுபோன்ற முன்னேற்றத்தைத்தான் நான் மோடியிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறாரா?
வியாழன், 18 ஏப்ரல், 2013
Home »
» Tear out the Originality of Modi
Tear out the Originality of Modi
By Muckanamalaipatti 11:02 AM
Related Posts:
Salah Time Pudukkottai Dist Only July 2017 July 2017 Shawwal 1438 - Dhul Qadah 1438 January February March Apr… Read More
Is Biggboss Tamil Real Reality Show or scripted Drama Is Biggboss Tamil a real reality show or a scripted drama? asks viewers as they blame lack of reality in the show.Is Biggboss Tamil a real reality… Read More
1 TO 1 G. S. T. Tax... what changes are the cost of products? … Read More
Money Rate Top 10 Currencies By popularity Currency Unit INR per Unit Units per INR USD US Dollars64.6101644150.0154774409 EUR Euros73.79… Read More
வீட்டு வாசலில் பசுமாடு இறந்து கிடந்ததாகக் கூறி, இஸ்லாமியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்ட நிகழ்வு ஜார்க்கண்டில் நடந்துள்ளது.. … Read More