சனி, 27 ஏப்ரல், 2013

கைது செய்யப்பட்டது தவறானது

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்கிற இடதுசாரி அமைப்பை சேர்ந்த இளைஞர் ஒருவரை பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார் என்று கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் க்யூ ப்ரான்ச் போலிஸ் கைது செய்தது.
தேசிய பாதுகாப்ப சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டது தவறானது என்று கூறி மதுரை உயர்நீதி மன்றம் அவரை நேற்று விடுதலை செய்தது.
அவர் கைது செய்யப்பட்ட போது.. தேச துரோகி என்பதாக சித்தரித்து அவரை இழிவு படுத்திய நமது ஊடகங்கள் அவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டதைப் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை.
ஆனாலும் தினமல ஏடு இந்த விசயத்தில் செய்தி வெளியிடாமல் இருந்திருந்தால் கூட நாம் அதனை ஒரு பொருட்டாக கருதியிருக்க போவதில்லை.. இந்த செய்தியை வெளியிட்ட அந்த பாசிச பத்திரிக்கை விடுவிக்கப்பட்ட அந்த நிரபராதியின் புகைப்படத்தை போடாமல்... மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும் கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் சென்னை திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் களமிறக்கப்பட்டவரான சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்களது படத்தை வெளியிட்டுள்ளது.

குற்றவாளி என்று கைது செய்யும் போது தெளிவாக அவரது புகைப்படத்தை வெளியிட்ட தினமலம்... அவர் நிரபராதி என்று நீதிமன்றம் விடுதலை செய்ததை செய்தி வெளியிட்டுள்ளதிலும் தமது பாசிச புத்தியை காட்டியுள்ளது.
சம்பந்தப் பட்டவரின் படத்தை போடாமல்.. மமக பொதுச்செயலாளரின் படத்தை வெளியிட்டதன் மூலம் சகோ தமிமுன் அன்சாரி அவர்கள் கடந்த காலங்களில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பதாக வருங்காலங்களில் இவருக்கு எதிராக சங்பரிவாரங்கள் பொய்ப்பிரச்சாரம் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் தினமலத்தின் இந் நடவடிக்கை அமைந்துள்ளது.

உடனடியாக தினமலர் இதற்காக சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.மேலும் நிரபராதியான அதிரை தமிம் அன்சாரி அவர்களது புகைப்படத்தையும் நிரபராதி என்பதாக குறிப்பிட்டு வெயியிட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு.
இதனை செய்யாவிட்டால்... அதற்குரிய சட்டரீதியிலான பலன்களை தினமலர் அனுபவித்தே தீரும்.