ஜெய்ப்பூரிலுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பொறியாளர் ரஷீத் ஹுசைன் என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். 2008 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் ஜெய்ப்பூரில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. வழக்கம் போல் காவல்துறையினர் அப்பாவிகளைத் துன்புறுத்தத் தொடங்கினர். குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத பொறியாளர் ரஷீத் ஹுசைனையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பத்து நாள்கள் காவலில் வைத்திருந்தனர். பிறகு அவர் மீது எந்த தவறும் இல்லை என்றுகூறி அவரை விடுதலை செய்து அனுப்பி விட்டனர். இந்தப் பத்துநாள்களுக்குள் இன்போசிஸ் நிறுவனம் எந்தவிதமான முன்னறிவிப்பும் தராமல் ரஷீதைப் பணியிலிருந்து நீக்கிவிட்டதாக அறிவித்தது. ஆனால் ரஷீத் ஹுசைன் சும்மா உட்கார்ந்துவிடவில்லை. 2008 ஆகஸ்டில் அவர் இன்போசிஸ் நிறுவனத்துக்கு எதிராக லேபர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு உயர்நீதிமன்றமும் ரஷீதுக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்தது. இன்போசிஸ் நிறுவனம் ரஷீதுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் முன்னிலையில் இதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டதை அடுத்து, இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் ராஜஸ்தான் முஸ்லிம் அமைப்பும், ராஜஸ்தான் மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தும் முதல் நாளிலிருந்தே ரஷீதின் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்ததுடன் நீதிக்கான நெடும்பயணத்தில் முன் நின்று போராடின. வெற்றி பெற்றன. “ ரஷீதுக்குக் கிடைத்துள்ள தீர்ப்பு இந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஆகும். அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது இழைக்கப்படும் அநீதிகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். தவறான நடவடிக்கை எடுக்கும் காவல்துறை அதிகாரிகளும் தண்டிக்கப்படவேண்டும்” என்று கூறுகிறார் ராஜஸ்தான் முஸ்லிம் அமைப்பின் தலைவரும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த தேசியச் செயலாளருமான முஹம்மது சலீம் அவர்கள். முஸ்லிம் இளைஞர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தும் போக்கு இனியேனும் நிறுத்தப்படுமா? (நன்றி: சமரசம் http://www.samarasam.net/ via:http://www.valaiyugam.com/ |
திங்கள், 8 ஏப்ரல், 2013
Home »
» உண்மைக்கு கிடைத்த இன்னொரு வெற்றி...!
உண்மைக்கு கிடைத்த இன்னொரு வெற்றி...!
By Muckanamalaipatti 11:09 PM
Related Posts:
கறுப்பர் கூட்டம்: சொந்தில்வாசனை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிர்வாகி செந்தில் வாசனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சைபர் கிரைம் காவல்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்ற… Read More
COVID19 Tamil Nadu … Read More
வடகொரியாவுக்குள் நுழைந்த கொரோனா?: ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் அதிபர் கிம்! வடகொரியாவில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொர… Read More
கொரோனா அச்சுறுத்தல்: மரத்தடியில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடர்!கொரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரி வரலாற்றில் முதன்முறையாக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மரத்தடியில் அரங்கேறியுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து புதுச்… Read More
ஹெர்டு இம்யூனிட்டி நோய்த் தடுப்பாற்றலை உறுதி செய்யுமா?டெல்லியில் சமீபத்தில் நடந்த ஒரு செரோலாஜிகல் ஆய்வில், சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் சுமார் 23% மாதிரிகளில் கொரோனா வைரஸ்-குறிப்பிட்ட ஆன்டிபாடிகள் இருப்ப… Read More