செவ்வாய், 11 அக்டோபர், 2016

கோவையில் நடந்த படுகொலைகளுக்கும் 1998 பிப்ரவரியில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுக்கும் பிறகான களப்பணிகளில் முன்னின்றவர்.


சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் அன்பு சகோதரர் நாசர் அவர்கள் 1997 நவம்பரில் கோவையில் நடந்த படுகொலைகளுக்கும் 1998 பிப்ரவரியில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுக்கும் பிறகான களப்பணிகளில் முன்னின்றவர்.
இதனால் பல இன்னல்களுக்கும் அவச்சொற்களுக்கும் ஆளானவர்.
இந்த நூலில் பளிச்சென்று பல உண்மைகளைக் சொல்கிறார். இவர்கூறும் உண்மைகள் பலருக்கும் கசப்பானவை.எனினும் உண்மைகளை தேடுவோருக்கு இனிப்பானவை.
1997 நவம்பர் படுகொலைகளுக்கு முன்னர் கமிஷ்னர் மாசனமுத்து தலைமையில் நடந்த armed Reserve police camp க்கு இந்து முன்னணி தலைவன் ராமகோபாலன் அழைத்துச்செல்லப்பட்டிருக்கிறார்.அப்போது அந்த வளாகத்திலிருந்த முஸ்லிம் காவலர்கள் வெளியேற்றப்பட்டிருக்குன்றனர்(பக்கம்:61)
அல்உம்மா இயக்கத்தினரிடம் "நீங்கள் குண்டு வைக்கணும் அப்போத்தான் உங்களைக் கொன்றவர்களுக்குப் புரியும்.பயம் வரும்"என்று உளவுத்துறை உசுப்பேற்றியது.(பக்கம்:81)
இப்படி பல உண்மைகளை யாரைப்பற்றியும் கவலைப்படாமல் கூறியிருக்கிறார்.இதற்காகவே இந்நூலை அனைவரும் வாசிக்க வேண்டும்.
காவல்துறையும் இந்துத்துவ அமைப்புகளும் நாசர் அவர்களுக்கு நெருக்கடி தரலாம். அல்லது நூல் பிரபலமாகி விடக்கூடாது என்பதற்காக கள்ள மவுனம் காக்கலாம்.
எனவே இந்நூல் பரவலாக வேண்டும்.
இயக்கம் சார்ந்த சாராத அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்
பக்கங்கள்:128. விலை:100/.
தோடர்புக்கு: 9884155289
இல்யாஸ் ரியாஜ்