பெங்களூருவில் ஆண்களை கடத்தி அவர்களின் ஆண் உறுப்புகளை துண்டித்து அவர்களையும் திருநங்கைகளாக மாற்றும் திருநங்கை குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் திருநங்கைகள் சில இளைஞர்ளை கடத்தி சென்று அவர்களின் ஆணுறுப்புகளை துண்டித்து, அவர்களை தங்கள் இனத்தவர்களாக மாற்றி கொள்ளுவதாக குற்றம் சாட்டு எழுந்து வந்தது.
அண்மையில் பெங்களூருவின் பெற்றோர் ஒருவர், தனது மகனை திருநங்கைகள் கடத்தி சென்று அவரின் ஆணுறுப்பை துண்டித்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
ஆரம்பத்தில் முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸார், பின்னர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணையினை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த விசாரணையின் போது புலிகேசிநகரில் அமைந்துள்ள கோவில் பூசாரியான துளசியப்பா என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதன்படி துளசியப்பாவை கைது செய்து விசாரணை செய்தபோது அவர், “கடத்தப்பட்ட இளைஞர் ராஜேஷ் தனது கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்.
அவரின் தோற்றத்தை பார்த்து, மூளை சலவை செய்து, சிக்கப்பள்ளாபூரை சேர்ந்த திருநங்கையிடம் சேர்ப்பதற்கு முயற்சித்தார்.
ஆனால் குறித்த இளைஞர் மறுப்பு தெரிவித்தார்.
ஆனால் நான் ஆனந்திக்கு தகவல் தெரிவித்து, பெங்களூரு வரவழைத்தேன். அவர்கள் இளைஞனை ராஜேஷை அழைத்து சென்றனர்” என கூறியுள்ளார்.
அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட பொலிஸார் கிடைத்த தகவலை வைத்து, ஆனந்தி குழுவை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளியான ஆனந்தி மற்றும் அவரது நண்பர்கள் ஐசு, ஸ்ரேயா ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களின் கையடக்கத்தொலைபேசியின் அழைப்புகளை வைத்து புலிகேசிநகரில் அமைந்துள்ள திருநங்கை ராஜேஸ்வரி என்பவரது வீட்டில் ஆனந்தி, தனது நண்பர்களுடன் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் ஆனந்தி, ஐசு, ஸ்ரேயா ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது குறித்து பொலிஸார் தெரிவித்துள்¬ளதாவது, பெங்களூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் திருநங்கை தோற்றமளிக்கும் இளைஞர்களை, மூளை சலவை செய்து, தங்களுடன் அழைத்து செல்வதாக கூறினர்.
வற்புறுத்துதலுக்கு மறுக்கும் இளைஞர்களை கடத்தி சென்று, அவர்களின் ஆணுறுப்பை துண்டித்து திருநங்கையாக மாற்றிவிடுவதாக கூறினர்.
இளைஞர்கள் மாயமான தகவல் அறிந்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விடுவார்கள் என பயந்து, திருநங்கையாக மாற்றியவர்களை உடனே ஆந்திரா மற்றும் தமிழகத்திற்கு விற்பனை செய்துவிடுவார்கள்.
அங்குள்ள குழுவினர் இளைஞர்களை அழைத்து சென்று பாலியல் தொழில் செய்து, பணம் சம்பாதித்து கொள்வார்கள்.
அதேபோன்று ஆந்திரா மற்றும் தமிழகத்தில் இருக்கும் இளைஞர்களை, பெங்களூரு அழைத்து வந்து, இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதுவதாக தெரியவந்தது.
விசாரணையில் கொடுத்த தகவலின்படி ஆனந்தி மற்றும் அவரது குழுவினரிடம் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
முறைப்பாடு வரும் தருணத்தில் அதன் பேரில் நடவடிக்கை மேற்கொண்டு, சிக்கியுள்ள இளைஞர்ளை மீட்க வழியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..