திங்கள், 10 அக்டோபர், 2016

புர்கா அணிந்து பெண்களிடம் சில்மிஷம் செய்த காவி ஹிந்துத்துவா தீவிரவாதி பா.ஜ.க தலைவர தரும அடி


அலஹாபாத்: முஹர்ரம் கூட்டம் ஒன்றில் புர்கா அணிந்துகொண்டு பெண்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்த பா.ஜ.க தலைவர் ஒருவரை மக்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம், அலஹாபாத் மாவட்டத்தில் உள்ள முஐமா பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த செயலில் ஈடுபட்டவர் அபிஷேக் யாதவ் என்றும் இவர் முஐமா பகுதியின் பா.ஜ.க ஜில்லா பஞ்சாயத் உறுப்பினர் என்பதும் தெரியவந்துள்ளது.
பெண்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்த அபிஷேக் அங்கிருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனையடுத்து அவர் மீது சந்தேகமுற்ற மக்கள் புர்காவை அகற்றி அவரது முகத்தை காட்ட கூறியுள்ளனர். புர்காவை அணிந்திருப்பது ஆண் என்று அறிந்ததும் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இவரது அநாகரீக செயலில் ஆத்திரமுற்ற சிலர் அவரை தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
தன்னை ஹிந்து அபிஷேக் யாதவ் என்று கூறிக்கொள்ளும் இவர் முன்னதாக மத மோதல்களை தூண்டியதற்காக சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts: