ஒரு அரசு நிகழ்ச்சிக்காக விளக்கேற்ற அழைத்தபோது
அது அக்னி சாட்சியாக நிறுத்தி செய்யப்படும் வழிபாடாக
நான் கொண்ட ஓரிறை கொள்கைக்கு எதிரானதாகிவிடும் எனவே
அல்லாஹ்வின் பெயரால் நான் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறேன்.
விளக்கேற்றி நெருப்பை சாட்சியமாக வைத்து நிகழ்ச்சியை துவங்க நினைப்பவர்கள் உங்கள் நம்பிக்கைபடி செய்து கொள்ளுங்கள் அதற்கு நான் முட்டுக்கட்டையாக இருக்க மாட்டேன்'
இங்கே ஒரு மந்திரியாக இருந்தவர்
முஸ்லீம் லீக்கின் மந்திரி, ஆனால் தனது ஏகத்துவ நிலைபாட்டில் அசைந்து கொடுக்கவில்லை...!
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
நடிகர் மம்முட்டி, 'பலதரப்பட்ட மக்களின் வாக்குகளை வாங்கி மந்திரியான ஒருவர்,
அவர்களின் மத சம்பிரதாயப்படி விளக்கேற்ற மறுப்பது அந்த மக்களை அவமதிப்பது' எனச்சொன்னார்.
அந்த சபையிலேயே கண்ணியமிக்க அப்துற்ரப் சொன்னார் நான் அகிலங்களின் அதிபதியின் அடிமை
(அதுதான் எனது பெயரின் பொருள்)
அதற்க்கு பிறகுதான் மக்களின் மந்திரி எனவும்,
இதனால் எனது பதவி பறிக்கப்பட்டாலும் ஆட்சேபனையில்லை எனவும் செம்மையாக சொன்னார்.
ஒரு முஸ்லீம்
அதுவும் ஒரு முஸ்லீம் ஆட்சியாளர் எப்படி இருக்கவேண்டுமென கற்றுத்தந்த
'அப்துற்ரப்' போன்றவர்களின் செயல்
தமிழக முஸ்லீம் லீக்கிற்க்கு
ஒரு பாடமாக இருக்கட்டும்..!