வியாழன், 6 அக்டோபர், 2016

மூடப்பட்ட கடைகளை திறந்து விடுங்கள் நாங்கள் உங்களை ஏதும் செய்யமாட்டோம், என அடைத்த கடையை திறக்க சொன்ன முஸ்லிம் மக்கள்.

கலவரம் இல்லை..
வன்முறை இல்லை..
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடவில்லை..
பிரியாணி அண்டாக்கள் கொள்ளை போகவில்லை, மாற்றுமத சகோதரர்களின் செல்போன் கடைகளை கேஸ் வெல்டு வைத்து உடைத்து பொருட்கள் களவாடபடவில்லை, பிண அரசியல் இல்லை, எந்த வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெறவில்லை,
கடைகள் சூரையாடப்படவில்லை, பஸ்கள், ஆட்டோகள் உடைக்கப்படவில்லை,


மூடப்பட்ட கடைகளை திறந்து விடுங்கள் நாங்கள் உங்களை ஏதும் செய்யமாட்டோம், என அடைத்த கடையை திறக்க சொன்ன முஸ்லிம் மக்கள்.
இதுதான் இஸ்லாமியர்களின் ஜனாஷா (இறுதி) ஊர்வலம். இதுதான் இஸ்லாம்.. இதுதான் எங்கள் மார்க்கம் எங்களுக்கு கற்றுத் தந்தது..
கோவை சிறையில் மாரடைப்பால் நேற்று காலை இறந்த சகோதரர் ஒஜீர் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது இல்லத்திற்கு ஊர்வலமாக அமைதியாக எடுத்து செல்லபட்டது..