வெள்ளி, 25 நவம்பர், 2016

புதிய ரூ.500 நோட்டில் 9 வித்தியாசம்! அவசரமாக அச்சடித்ததால் தவறு நடந்துவிட்டது: ரிசர்வ் வங்கி! த்து இத சொல்ல வெட்கமா இல்ல ! மோடி அரசின் சாதனையில் இதுவும் உண்டு !

புதிததாக அச்சடிக்கப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டுக்களில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. டெல்லியில் அப்ஷார் என்பவர் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுக்களில் 9 வித்தியாசங்கள் இருந்தன.
இரண்டும் ஒரிஜினல் நோட்டுக்கள் என டைம்ஸ் ஆப் இந்தியா உறுதி செய்துள்ளது. இந்த குளறுபடி மக்களிடம் மன ரீதியாக பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி செய்தித் தொடர்பாளர் அல்பானா கில்லவானா, அவசர அவசரமாக அச்சடிக்கப்பட்டதால் இப்படி தவறு நடந்துவிட்டதாகவும், மக்கள் இந்த நோட்டுக்களை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.