பற்றி எரியும் இஸ்ரேல்: அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவிப்பு
இஸ்ரேலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பாரிய தீ விபத்தை இது வரையில் அணைக்க முடியாமல் தீயணைப்பு படை வீரர்கள் போராடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்து ஏற்பட்டு சில மணி நேரங்களிலேயே சட்ட விரோத குடியேற்றப் பகுதிகள் உட்பட இஸ்ரேலின் பல பிரதேசங்களை தாக்கியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான வீடுகள் பற்றி எரிந்துள்ளதுடன், 300 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக சேதம் ஏற்பட்டுள்ளதாக இதுவரையில் மதிப்பிடப்பட்டுள்ளது. பலர் தங்கள் வீடுகளை விட்டும் வேறு பிரதேசங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர்.
26 ஹெலிகாப்டர்கள் ஊடாக 48 தீ அணைப்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள போதிலும் இதுவரையில் தீயை அணைக்க முடியவில்லை.
இந்நிலையில், இந்த கொடூர தீயை அணைக்க துருக்கி, இத்தாலி, சைப்ரஸ், கிரீஸ் உள்ளிட்ட பல உலக நாடுகளிடம் இஸ்ரேல் உதவி கோரியுள்ளது.
இஸ்ரேலின் செயற்கைக்கோள் ஆமோஸ் 6 வெடித்தமையே இந்த தீ விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இறைவனின் சாபமே இந்த தீவிபத்துக்கான காரணம் என யூத மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.