ஞாயிறு, 18 டிசம்பர், 2016

கோவையில் ரூ.300க்கு மொபைல் ஃபோன்

300 mobile

கோவையில் தனியார் மொபைல் ஃபோன் நிறுவனம் ஒன்று 300 ரூபாய்க்கு ஃபோன்களை விற்பனை செய்துவருகிறது. மலிவு விலையில் கிடைக்கும் ஃபோன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் மொபைல் நிறுவனம் ஒன்று 300 ரூபாய்க்கு இரட்டை சிம், கேமிரா, எஃப்எம் ரேடியோ உள்ளிட்ட வசதிகள் கொண்ட மொபைல் போனை விற்பனை செய்து வருகிறது. மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மக்களின் பணத் தட்டுப்பாடு காரணமாக அவர்களின் வசதிக்காக மலிவு விலை ஃபோனை கொண்டுவந்துள்ளதாகவும், விரைவில் 2 ஆயிரம் ரூபாய்க்கு ஆண்டிராய்டு மொபைலை விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளார்.

Related Posts: