தர்மபுரி மாவட்டம், பாலக்கோடுலிருந்து காரமங்கலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ். தாபா என்ற ஓட்டல் அமைந்துள்ளது. இங்கு ஒசூரிலிருந்து கொண்டுவரப்பட்ட ரூ.2000 புதிய நோட்டுகள் கட்டுக்கட்டாக கமிஷன் அடிப்படையில் மாற்றப்பட்டது.
கரூரிலிருந்து வந்த புரோக்கர் 5 பேர் மூலம் பழைய ரூபாய்நோட்டுகளை கொடுத்துவிட்டு, புதிய ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக சுமார் ரூ.47 லட்சம் அளவில் மாற்ற முற்பட்டபோது போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
இதில் புரோக்கர்கள் 5 பேரையும் காரிமங்கலம் போலீசார் கைதுசெய்தனர். மேலும் 2 பேர் தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.
கட்டுக்கட்டாக புதிய ரூபாய் நோட்டுக்கள்..! ரூ.47 லட்சம் சிக்கியது..! 5 புரோக்கர்கள் அதிரடி கைது!! பிஜேபி பிரமுகர் !