பழைய ரூபாய் நோட்டுகளான ரூ.500 மற்றும் ரூ.1,000 செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, புதிய ரூபாய் நோட்டுக்களான ரூ.500 மற்றும் ரூ.2,000 வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது.
இதற்காக பல லட்சம் கோடி புதிய நோட்டுக்கள் நாசிக் மற்றும் மைசூர் போன்ற இடங்களில் அச்சிடப்பட்டன. இதனைத்தொடர்ந்து தினம்தினம் அச்சிடப்பட்டு வங்கிகளுக்கு ராணுவ விமானம் மற்றும் வாகனங்கள் மூலம் நாடுமுழுவதும் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அச்சிடப்பட்ட ரூ.500, ரூ.2,000 புதிய ரூபாய் நோட்டுகள் எவ்வளவு செலவாகிறது என்றும் அவற்றின் மதிப்பு குறித்து சாமனியர் ஒருவர் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார்.
இதனையடுத்து, அவற்றை அச்சிடப்பட்டதற்கான ஒரு தாளுக்கு எவ்வளவு செலவாகிறது என்று தற்போது பதிலளித்துள்ளது. அதில், ரூ.500 புதிய தாள் ஒன்றுக்கு ரூ.3.09 ஆகவும், ரூ.2,000 தாள் ஒன்றுக்கு ரூ.3.54 செலவாகிறது என்று ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது.