10/12/16
முக்கிய அறிவிப்பு
முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு #தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகள் பொருளாதாரத்தை ஈட்டுவது தொடர்பாக சில கட்டுப்பாடுகள் போடப்பட்டு அதனை நடைமுறைப்படுத்தியும் வருகின்றோம்.
குறிப்பாக #ஜமாஅத் மூலம் பெற்ற அறிமுகத்தை வைத்து யாரிடமும் தொழில் முதலீடு பெறக் கூடாது, அளவுக்கதிகமான கடன் பெறக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளும் அதில் அடக்கம்.
இருப்பினும் சிலர் ஜமாஅத்தின் #அறிமுகத்தை வைத்து லாபத்தில் பங்கு தருவதாகக் கூறி பலரிடம் முதலீடுகளும், கடன்களும் பெறுவதாக பரவலாக புகார்கள் வருகின்றன.
ஜமாஅத்தின் கட்டுப்பாட்டை மீறி இது போல் நிதி திரட்டுவோர் நிர்வாகிகளாக இருந்தால் அவர்கள் #பதவி_நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், #பேச்சாளர்களாக இருந்தால் அவர்கள் தஃவாப் பணியில் இருந்து முழுமையாக நிறுத்தப்படுவார்கள் என்றும் அறிவுறுத்துகிறோம்.
இப்படி யாராவது முதலீடு என்ற பெயரில் பணம் கொடுப்பார்களேயானால் அதற்கு ஜமாஅத் பொறுப்பல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படி யாராவது முதலீடு என்ற பெயரில் பணம் கொடுப்பார்களேயானால் அதற்கு ஜமாஅத் பொறுப்பல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மு.முஹம்மது யூசுஃப்
பொதுச் செயலாளர்