புதன், 7 டிசம்பர், 2016

இவ்வளவு கண்ணியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இத்தனை இலட்சம் மக்களோடு இந்தியாவில் ஒரு இறுதி ஊர்வலம் நடந்ததில்லை. நீங்கள் நடத்தி காட்டி விட்டீர்கள்

அத்தனை அதிமுக நண்பர்களுக்கும், சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இவ்வளவு கண்ணியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இத்தனை இலட்சம் மக்களோடு இந்தியாவில் ஒரு இறுதி ஊர்வலம் நடந்ததில்லை. நீங்கள் நடத்தி காட்டி விட்டீர்கள். Hats Off.
தமிழக காவல்துறைக்கும், அதன் பல்வேறு உப துறைகளுக்கும் மிகப் பெரிய நன்றி. பேரதிர்ச்சி தந்த ஒரு பேராளுமையின் மரணத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்று டெல்லி ஒநாய்கள் ரத்த வெறியோடுக் காத்திருந்தப் போது, ஒரு சிறு கீறல் கூட விழாமல் தமிழகம் எப்போதுமே இந்தியாவை விட ஒரு படி மேல் தான் என்று சட்ட ஒழுங்கினைக் காத்ததற்கு ஒரு ராயல் சல்யூட்!
அதிமுக என்றாலே திமுக தான் எதிரி என்கிற எண்ணத்தினை முளையிலேயே கிள்ளி எறிந்து, எதிர்க்கட்சி தலைவியின் இறப்பினை இவ்வளவு விதந்தோதி, போற்றி, கவுரவமாய் அதிமுக நண்பர்களுக்கான இடத்தையும், ஆறுதலையும் சொல்லி, இந்தியாவில் இதற்கு முன் எப்போதும் இப்படி ஒரு எதிர்க்கட்சி இயங்கி இருக்க முடியாது, அதற்கான தகுதி எங்களுக்கு மட்டும் தான் என்று சொல்லாமல் செய்து காட்டி விட்டீர்கள்.
வட இந்திய அரசியலில் மட்டும் தான் ஹோலி, தீபாவளிக்கு இரு கட்சித் தலைவர்களும் வாழ்த்து சொல்வார்கள் என்கிற மரபைக் காட்டி, தமிழ்நாடு ஏன் இப்படி இருக்கிறது என்று மொன்னையாய் நம்மை சகிப்புத்தன்மையற்றவர்களாக சித்தரித்த அத்தனை வடக்கத்திய ஊடகங்களின் முகங்களிலும் கரியைப் பூசி விட்டீர்கள். Proud to be a DMK Supporter.
எல்லாவற்றையும் விட தமிழக மக்கள். தங்களுடைய முதல்வரின் அகால மரணம் தெரிந்து அமைதியாய், எந்த ஒவர் செண்டிமெண்டும் செய்யாமல், அதை சமயத்தில் ஆத்மார்த்தமான ஒரு அஞ்சலியினை முதல்வருக்கு செலுத்தி விட்டீர்கள். திராவிட இயக்க வேர்களை அறுத்து இந்த வெற்றிடத்தினைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே நுழையலாமா என்று தூண்டில் போட்டவர்களின் எண்ணத்தில் தெளிவாய் மண்ணை அள்ளிப் போட்டீர்கள். பெரியார் பூமி என்பது சொல்லல்ல, வாழ்வியல் முறை என்று நிரூபித்த மக்களுக்கு வந்தனங்கள்.
திராவிட இயக்கம் வேரூன்றி இருக்கின்ற மண் தான் எப்போதும் இந்தியாவுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறது.
Take that India, this is how we live. You can never ever understand the psyche of Tamils. We are unique and we will remain unified.

Related Posts:

  • சிம்பு  பாட்டை விட ஆபாசமா இருக்கு நீங்க கொடுத்திருக்கிற பேட்டி. உங்க பெட்ரூமுக்குள்ளேயும் பாத்ரூமுக்குள்ளேயும் நீங்க என்ன வேணா பண்ணிட்டுப் போங்க. யாரு… Read More
  • வடசென்னை மாவட்டம் வில்லிவாக்கம் கிளை சார்பாக நடத்தும் இலவச மருத்துவ முகாமி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வடசென்னை மாவட்டம் வில்லிவாக்கம் கிளை சார்பாக நடத்தும் இலவச மருத்துவ முகாமிற்கு சிட்கோ நகர் நல்வாழ்வு சங்க நிர்வாகிக… Read More
  • தோல் உரித்தா கோவை மாவட்டம் காரமடையில் தான் பிஜேபி, rss முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் அதிகம் இருக்கும் இடம் அந்த இடத்தில் அல்தாஃபி சங்பரிவாரத்தை தோல் உரித்த… Read More
  • டெல்லியில் Uber cab டெல்லியில் Uber cab டாக்ஸ்சியில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அழகான ஆண் குழந்தை பெற்ற பெண்உதவிய இஸ்லாமிய கார் ஓட்டுனர் Shahnawazகுழந்தைக்கு அந்… Read More
  • கே_கே_நகரில்_தமுமுக_சுத்தம்_செய்தர் தென்சென்னை மாவட்டம் K.K.நகர் வீதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெருக்களை மமக மாவட்ட செயலாளர் அலி ஜின்னா அவர்கள் தலைமையில் சுத்தம் செய்யும் … Read More