அன்றாட தேவைகளில் ஒன்றாக ஸ்மார்ட்போன் மாறிவிட்ட நிலையில், இன்று இளைஞர்களின் கையில் ஹெட்போன் 24 மணி நேரமும் உலா வருகிறது. ஆனால் இதன் பாதிப்பை பலர் உணர்வதே இல்லை.
ஹெட்போன்களில் இருந்து நம் காதுக்கு 90 டெசிபல் ஒலியானது நேரடியாக வருகிறது. இதனால் குறுகிய காலத்திலே காது கேளாமை பிரச்சனை வர வாய்ப்புள்ளது.
குறிப்பாக ஒருவர் 5 நிமிடங்களுக்கு விடாது 100 டெசிபல் ஒலியை கேட்டால் அவருக்கு காது கேட்காமல் போக அதிக வாய்ப்புள்ளது என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி, பிறர் பயன்படுத்தும் ஹெட்போன்களை பயன்படுத்தினால் காதிரைச்சல், தொற்று நோய்கள் போன்ற ஆபத்தும் வர வாய்ப்புள்ளது.
இசையால் உலகை மறக்க செய்யும் ஹெட்போன்கள் நம் செவிகளை செயலிழக்கவும் செய்கின்றன. இவை செவிகளில் உள்ள சவ்வுகளை பாதிப்பதுடன் மூளையின் நரம்புகளையும் தாக்குகிறது. பெரும்பாலும் சாலை விபத்துக்கு காரணமாகவும் இந்த ஹெட்செட்களே உள்ளது.
முடிந்தவரை மிகசிறிய அளவில் உள்ள ஹெட்போன்களை தவிர்த்து காதுகளுக்கு வெளியே இருக்கும்படியான பெரிய ஹெட்போன்களை பயன்படுத்துவது நல்லது. அல்லது ஹெட்செட்களில் உள்ள ஸ்பாஞ் கவர் போன்ற ரப்பர் கவர்களை மாதத்திற்கு ஒருமுறை மாற்றுவது மிகவும் நல்லது.
வாகனங்களில் பயணம் செய்யும் போதும் ஹெட்செட்களை தவிர்ப்பது நல்லது. மேலும் பிற நேரங்களில் ஹெட்செட்களை பயன்படுத்தும் போது குறைந்த அளவிலான ஒலியை கையாள்வது நல்லது. தூக்கத்தின் போது ஹெட்போனை தவிர்ப்பது பயன்தரும்.
பதிவு செய்த நாள் : December 11, 2016 - 01:05 PM