செவ்வாய், 10 ஜனவரி, 2017

உஷார்..!!! ரெட் பஸ் டிக்கெட் செல்லாது… வெளியூர் செல்லும் 2 லட்சம் பேர் பரிதவிப்பு

பொங்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் Red-Bus என்னும் மொபைல் ஆப் மூலம் புக் செய்த டிக்கெட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவித்திருக்கின்றனர் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆம்னி பேருந்து உறிமையாளர்களிடம் ஜன 12 முதல் 17 வரை அதாவது பொங்கல் தொடங்கி முடியும் வரை புக் செய்த டிக்கெட்டுக்கள் செல்லாது என அறிவித்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை பொங்கல் பண்டிகையை யொட்டி சுமார் 2 லட்சம் பேர் ரெட் பஸ் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் முன்பதிவு செய்த டிக்கெட் மூலம் தங்கள் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கமாட்டோம் என அறிவிக்கிறார் ஆம்னி பேருந்துகள் சங்க தலைவர் பாண்டியன்.
மேலும் ரெட் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்தவர்கள் பயணம் செய்ய வேண்டுமானால் தங்களுடைய புக்கிங் என்னை காண்பித்து அதற்கான பணத்தை தங்களிடமே கொடுக்கவேண்டும் என்று டிமாண்ட் செய்கிறார்கள் ஆம்னி பஸ் உரிமையாளர்கள்.
ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் ரெட் பஸ் மொபைல் ஆப் நிறுவனத்திற்கும் இடையே நடக்கும் மோதலில் சுமார் ரெண்டு லட்சம் பயணிகள் பாதிப்புள்ளாகும் ஆபத்து உள்ளது.
இந்த அறிவிப்பு தற்காலிகம்தான் என்றும் தங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை ரெட் பஸ் நிறுவனத்தை சரியாக கொடுத்துவிட்டால் தங்களது நிலைபாட்டை மாற்றி கொளவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார் ஆம்னி பஸ் சங்கத்தின் துணை தலைவர் அன்பழகன்
எது எப்படியோ ரெட் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்தவரா நீங்கள்?
உடனடியாக உங்கள் இருக்கையை சம்பந்தப்பட்டவரிடம் பேசி உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

http://kaalaimalar.net/redbus-tickets-cancelled/

Related Posts:

  • TN தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு-- 1,30,058 ச.கி.மீமக்கள் தொகை. ------------------ 7,21,38,958ஆண்கள் ----------------------------- 3,61,58,871பெண்கள்---… Read More
  • ஸ்மார்ட் கார்டு ஸ்மார்ட் கார்டுக்கு யாரெல்லாம் இந்த பாரம் கொடுத்திட்டீங்க? குடுக்காதவர்கள் சீக்கிரமா உங்க நியாயவிலை கடையில் பாரம் வாங்கி நிரப்பி கொடுக்கவ… Read More
  • ‪#‎வண்மையாக__கண்டிக்கிறோம்‬ ஹரியானா மாநிலத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த அப்பாவி இளைஞன், காவி பயங்கரவாதிகளால் தலை வேறாக,உடம்பு பகுதி வேறாக வெட்டி படுகொலை. குறிப்பி… Read More
  • தெலுங்கானா அரசு உத்தரவு..!! ரமலான் மாத சலுகை: ரமலான் மாத சலுகை: முஸ்லிம் ஊழியர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்ரமலான் மாதத்தில் 4 மணிக்கே வீட்டுக்கு செல்லலாம்..! தெலுங்கானா அரசு உத்தரவு..!… Read More
  • பசு பாதுகாப்பு மையத்தில் நடந்துள்ள மெகா ஊழல்! பாஜக ஆட்சி செய்து வரும் ராஜஸ்தானில் 'பசு பாதுகாப்பு மையங்களில் நடைபெற்றுள்ள பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஊழலை வெளிக் கொண்டு வந்துள்ளது ஏசிபி. இது… Read More