திங்கள், 2 ஜனவரி, 2017

24 லட்சம் சிரியா அகதிகளுக்கு சவூதி அடைக்கலம் வழங்கியுள்ளது !


சிரியாவில் பிரச்சினை ஆரம்பித்தது முதல், இதுவரை 24 இலட்சம் சிரியா அகதிகளுக்கு சவூதி அரேபியா அடைக்கலம் கொடுத்துள்ளதாக சவுதி வெளிவிவகார அமைச்சர் ஆதில் அல் ஜுபைர் தெரிவித்துள்ளார்.
blogger-image--81114768

அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது, சவூதி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் போதே ஆதில் அல் ஜுபைர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
கடந்த ஒன்றரை வருடங்களாகக் சுமார் பத்து இலட்சம் யெமன் முஸ்லிம்களுக்கும் சவூதி அரேபியா அடைக்கலம் கொடுத்துள்ளது. இதில் சுமார் 7 – 8 இலட்சம் பேர் இதுவரை சவூதியில் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.
மன்னர் சல்மானின் கட்டளைக்கு இணங்க இவர்களில், ஒருவர் கூட அகதி முகாம்களிலோ, கூடாரங்களிலோ அடைத்து வைக்கப்பட்டவர்களாக இல்லை எனத் தெரிவித்தார்.
அகதிகளாகச் சவுதியை நோக்கி வருவோர் அனைவருக்கும், வேலை வாய்ப்புக்கான வீசாக்கள் வழங்கப்பட வேண்டும்; அவர்களுக்கான சுகாதார வசதிகள், பிள்ளைகளுக்கான பள்ளிக்கூட வசதிகள் ஆகிய அனைத்தும் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும். இந்த மண்ணில் அவர்கள் அகதிகளாக வசிக்கக் கூடாது; கௌரவ விருந்தினர்களைப் போலவே நடத்தப்பட வேண்டும். பிச்சைக்காரர்களைப் போலல்லாது, சுயமரியாதையோடு தொழில் செய்து கௌரவமாகத் தலைநிமிர்ந்து வாழ்பவர்களாகவே அவர்கள் இருக்க வேண்டும் என மன்னர் சல்மான் அதிகாரிகளுக்குக் கட்டளை இட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.