சுமார் 451 கோடி ஆண்டுகளுக்கு முன் நிலா உருவானது என கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக (UCLA) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பூமியின் துணைக்கோளான சந்திரன் எப்போது தோன்றியது? என்ற கேள்விக்கு தீர்வு காணும் வகையில், பல ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 1971-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையம், அப்பல்லோ 14 விண்கலம் மூலம் மனிதர்களை முதன் முறையாக சந்திரனுக்கு அனுப்பியது. சந்திரன் எப்போது உருவானது, அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்பது போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இதன்படி, சந்திரனில் உள்ள தாதுக்கள் மற்றும் கனிமத்தை வைத்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் சந்திரன் 451 ஆண்டுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பல உயிர்கள் வாழும் பூமியின் வயது 4500 கோடி ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.